2003ல் டைரக்டர் சரண் இயக்கிய ஜே ஜே படத்தில் அறிமுகமானவர் பூஜா. அதையடுத்து அட்டகாசம், உள்ளம் கேட்குமே, பட்டியல் என வரிசையாக நடித்த பூஜா, பாலா இயக்கிய நான் கடவுள் படத்தில் கண் பார்வையில்லாத பெண்ணாக நடித்திருந்தார்.அவரது நடிப்பும் பேசப்பட்டது.
இருப்பினும், அதன்பிறகு தமிழில் சரியான படங்கள் இல்லாததால் சில ஆண்டு இடைவெளிக்குப் பிறகு விடியும்முன், கடவுள் பாதி மிருகம் பாதி ஆகிய படங்கள் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். இந்த நேரத்தில் ஏதாவது பரபரப்பு ஏற்படுத்தி கோலிவுட்டின் கவனத்தை தன் பக்கம் இழுக்க வேண்டும் என்பதற்காக, சில மேடைகளில் நடிகர் ஆர்யா, டைரக்டர் பாலா ஆகியோருக்கு முத்தம் கொடுத்து அதை மீடியாக்களில் ப்ளாஷ் செய்ய வைத்தார்.

