ஆர்யாவை நான் கடவுள் படத்தில் அகோரியாக நடிக்க வைத்தவர் பாலா. அதன்பிறகு அவர், அவன் இவன் என்ற படத்தை இயக்கயிருந்த போது மீண்டும் ஆர்யாவை ஒரு ஹீரோவாக புக் பண்ணியதுடன், இன்னொரு ஹீரோ தேடிவந்தார். அந்த சேதியறிந்த ஆர்யா, இன்னொரு ஹீரோவுக்கு எனது நண்பர் விஷால் இருக்கிறார் என்று அவரது பெயரை சிபாரிசு செய்து அந்த படத்தில் விஷாலை நடிக்க வைத்தார்.
அப்போதுகூட, விஷால் கல்லூரி கதைகளாக நடிப்பவராயிற்றே. எனது படத்தில் நடிப்பாரா? என்று பாலா சொன்னபோது, நீங்கள் எப்படி சொன்னாலும் நடிப்பேன் சார் என்று பவ்யமாக அவர் முன் சென்று நின்றிருக்கிறார் விஷால். அப்போதுதான் இந்த படம் உனது கேரியரில் மறக்க முடியாத படமாக இருக்கும் என்று சொல்லி விஷாலை வித்தியாசமான கோணத்தில் காண்பித்தார் பாலா.
ஆக, ஆர்யா- விஷால் என்ற இரண்டு நண்பர்களும் அவன் இவன் படத்தில் நடித்தனர். அதையடுத்து, இருவருமே பிசியாகி விட்டதால், அவர்களை மீண்டும் இணைக்க நடந்த சில முயற்சிகள் கைகூடவில்லை. ஆனால், இப்போது சுசீந்திரன் இயக்கும் ஒரு படத்தில் மறுபடியும் ஆர்யாவும், விஷாலும் இணைந்து நடிக்கிறார்களாம்.
ஏற்கனவே பாண்டியநாடு படத்தில் சுசீந்திரனுடன் இணைந்த விஷால், பூஜை, ஆம்பள படங்களை முடித்ததும் மீண்டும் அவருடன் இணையும் படத்தில் விஷாலுடன் ஆர்யாவும் நடிக்கிறாராம். ஆனால், ஹீரோவாக நடிப்பவர் விஷால்தானாம். நண்பர் என்ற முறையில் நட்புக்காக ஆர்யா ஒரு வேடத்தில் நடிக்கிறாராம்.

cinema,arya, vishal, bala, naan kadavul, suseendran, pandianadu, pooja, ambala