சற்குணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சற்குணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

அதர்வாவுக்கு உத்தரவாதம் கொடுத்த பட அதிபர்கள்!

பாணா காத்தாடி, முப்பொழுதும் உன் கற்பனைகள் படத்தில் நடித்த அதர்வாவை பாலாவின் பரதேசி படத்தில் நடித்த பிறகுதான் கோடம்பாக்கம் உற்று நோக்கியது. சரியான கதைக்களம் கிடைத்தால் இவரையும் மோல்டு பண்ணி மாஸ் ஹீரோவாக்கி விடலாம் என்று சில இயக்குனர்களுக்கு நம்பிக்கை துளிர் விட்டது. அதனால், சூடு பறக்க சில கதைகளை மட்டுமே ஓ.கே செய்து சுறுசுறுப்பாக நடிக்கத் தொடங்கினார் அதர்வா.

அப்படி அவர் நடித்த படங்களில் இரும்புக்குதிரை நொண்டிக்குதிரையாகி அதர்வாவின் மார்க்கெட்டை அதள பாதாளத்தில் தள்ளி விட்டு விட்டது. இதன்காரணமாக, ஏறுமுகத்தில் சென்று கொண்டிருந்த அதர்வாவின் மார்க்கெட்டும், சம்பளமும் மீண்டும் பின்னோக்கி நகரத் தொடங்கியிருக்கிறது.