அதர்வா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அதர்வா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

அதர்வாவுக்கு உத்தரவாதம் கொடுத்த பட அதிபர்கள்!

பாணா காத்தாடி, முப்பொழுதும் உன் கற்பனைகள் படத்தில் நடித்த அதர்வாவை பாலாவின் பரதேசி படத்தில் நடித்த பிறகுதான் கோடம்பாக்கம் உற்று நோக்கியது. சரியான கதைக்களம் கிடைத்தால் இவரையும் மோல்டு பண்ணி மாஸ் ஹீரோவாக்கி விடலாம் என்று சில இயக்குனர்களுக்கு நம்பிக்கை துளிர் விட்டது. அதனால், சூடு பறக்க சில கதைகளை மட்டுமே ஓ.கே செய்து சுறுசுறுப்பாக நடிக்கத் தொடங்கினார் அதர்வா.

அப்படி அவர் நடித்த படங்களில் இரும்புக்குதிரை நொண்டிக்குதிரையாகி அதர்வாவின் மார்க்கெட்டை அதள பாதாளத்தில் தள்ளி விட்டு விட்டது. இதன்காரணமாக, ஏறுமுகத்தில் சென்று கொண்டிருந்த அதர்வாவின் மார்க்கெட்டும், சம்பளமும் மீண்டும் பின்னோக்கி நகரத் தொடங்கியிருக்கிறது.

இரும்புக்குதிரை இளைஞர்களை கெடுக்கும் படமல்ல! -அதர்வா

சமீபகாலமாக இளைஞர்கள் சாலைகளில் கண்மூடித்தமாக பைக் ஓட்டி வருகின்றனர். அவர்கள் செல்லும் வேகம் காரணமாக, சாலைகளில் செல்லும் மற்ற வாகனங்கள் பதறிப்போகின்றன.

அதனால்தான் சென்னை நகரத்தில் இந்த அளவு வேகத்துடன்தான் பைக் ஓட்ட வேண்டும் என்ற அவசர சட்டம் பிறக்கப்பட்டுள்ளது. அதையடுத்து, அதிக வேகத்துடன் பைக் ஓட்டுபவர்களை போக்குவரத்து போலீசார் பிடித்து அபராதம் வசூலிக்கத் தொடங்கியுள்ளனர். சிலரை கைது செய்தும் வருகின்றனர். இதனால் மிதமிஞ்சிய வேகத்தில் பைக் ஓட்டிய இளைஞர் பட்டாளம் தற்போது மிதமான வேகத்தில் பைக் ஓட்டத் தொடங்கியிருக்கிறார்கள்.

அதர்வாவின் புது அவதாரம்...

அதர்வா, வெறும் காதலை மட்டுமே மையமாக கொண்ட கதைகளை தவிர்த்து, மாறுபட்ட
வேடங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

தற்போது நடித்து வரும் புதிய படத்துக்காக,
அவர், 'சிக்ஸ் பேக்'கிற்கு மாறியுள்ளார். 'அவர் கூறுகையில், 'இனி கேரக்டர்களுக்கேற்ப
என் உடற்கட்டையும் முழுசாக மாற்றிக் கொண்டு நடிப்பேன். இந்த 'சிக்ஸ் பேக்'கிற்காக, சில மாதங்களாக என்னை தயார்படுத்த கால அவகாசம் தேவைப்பட்டது. அதற்காக, கடினமான பயிற்சிகள் எடுத்து வந்தேன். இப்போது என் உடலை 'சிக்ஸ் - பேக்'கிற்கு மாற்றி விட்டதை பார்க்கையில் சந்தோஷமாக உள்ளது. அதனால், இதே கெட்டப்பில் இன்னும் சில படங்களில் நடிப்பேன்' என்கிறார் அதர்வா.

ஸ்ரீதிவ்யாவை ஆச்சர்யப்படுத்திய அதர்வா!

பாணா காத்தாடியில் அறிமுகமானவர் அதர்வா. மறைந்த நடிகர் முரளியின் மகனான இவர் அதையடுத்து, முப்பொழுதும் உன் கற்பனைகள், பரதேசி ஆகிய படங்களில் நடித்தார். முதல் இரண்டு படங்களிலும் தனது வயதுக்கு ஏற்ற வேடத்தில் நடித்த அவர், அதன்பிறகு நடித்த பரதேசியில் தனது அனுபவத்தை மீறிய வேடத்தில் நடித்தார்.

 அதனால் இப்போது ஈட்டி, இரும்புக்குதிரை, கணிதன் என முற்றிலும் மாறுபட்ட கதையம்சம் கொண்ட படங்கள் அவருக்கு கிடைத்திருக்கிறது.இதில் ஈட்டி படத்தில் தடகள வீரராக நடிக்கும் அதர்வா, இரும்புக்குதிரையில் ரேஸ் வீரராக நடிக்கிறார்.