இரும்புக்குதிரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இரும்புக்குதிரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

அதர்வாவுக்கு உத்தரவாதம் கொடுத்த பட அதிபர்கள்!

பாணா காத்தாடி, முப்பொழுதும் உன் கற்பனைகள் படத்தில் நடித்த அதர்வாவை பாலாவின் பரதேசி படத்தில் நடித்த பிறகுதான் கோடம்பாக்கம் உற்று நோக்கியது. சரியான கதைக்களம் கிடைத்தால் இவரையும் மோல்டு பண்ணி மாஸ் ஹீரோவாக்கி விடலாம் என்று சில இயக்குனர்களுக்கு நம்பிக்கை துளிர் விட்டது. அதனால், சூடு பறக்க சில கதைகளை மட்டுமே ஓ.கே செய்து சுறுசுறுப்பாக நடிக்கத் தொடங்கினார் அதர்வா.

அப்படி அவர் நடித்த படங்களில் இரும்புக்குதிரை நொண்டிக்குதிரையாகி அதர்வாவின் மார்க்கெட்டை அதள பாதாளத்தில் தள்ளி விட்டு விட்டது. இதன்காரணமாக, ஏறுமுகத்தில் சென்று கொண்டிருந்த அதர்வாவின் மார்க்கெட்டும், சம்பளமும் மீண்டும் பின்னோக்கி நகரத் தொடங்கியிருக்கிறது.

இரும்புக்குதிரை இளைஞர்களை கெடுக்கும் படமல்ல! -அதர்வா

சமீபகாலமாக இளைஞர்கள் சாலைகளில் கண்மூடித்தமாக பைக் ஓட்டி வருகின்றனர். அவர்கள் செல்லும் வேகம் காரணமாக, சாலைகளில் செல்லும் மற்ற வாகனங்கள் பதறிப்போகின்றன.

அதனால்தான் சென்னை நகரத்தில் இந்த அளவு வேகத்துடன்தான் பைக் ஓட்ட வேண்டும் என்ற அவசர சட்டம் பிறக்கப்பட்டுள்ளது. அதையடுத்து, அதிக வேகத்துடன் பைக் ஓட்டுபவர்களை போக்குவரத்து போலீசார் பிடித்து அபராதம் வசூலிக்கத் தொடங்கியுள்ளனர். சிலரை கைது செய்தும் வருகின்றனர். இதனால் மிதமிஞ்சிய வேகத்தில் பைக் ஓட்டிய இளைஞர் பட்டாளம் தற்போது மிதமான வேகத்தில் பைக் ஓட்டத் தொடங்கியிருக்கிறார்கள்.