ஷாஜகான் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஷாஜகான் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

விஜய்க்குப் பிடித்த ஒரே நடிகை மீனா...

90களில் இருந்து கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வரை முன்னணி நடிகையாக விளங்கியவர் மீனா. ரஜினிகாந்த், கமல்ஹாசன், சரத்குமார், விஜயகாந்த், கார்த்திக், பிரபு, அஜித் உள்ளிட்ட ஏராளமான முன்னணி நடிகர்களுடன் நடித்தவர். தமிழில் மட்டுமல்லாது, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் எண்ணற்ற படங்களில் நடித்தவர்.

கடந்த வருடம் மலையாளத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற 'த்ரிஷ்யம்' படத்தில் நடித்து அடுத்த இன்னிங்ஸுக்கும் ரெடியாகிவிட்டார்.சமீபத்திய தொலைக்காட்சி பேட்டி அளித்த மீனா, அவருடன் நடித்த நடிகர்களைப் பற்றியும், அவருடைய திரையுலக வாழ்க்கையைப் பற்றியும் சுவாரசியமான சில தகவல்களைப் பகிர்ந்து கெண்டார். பல நடிகர்களுடன் மீனா ஜோடியாக நடித்திருந்தாலும் விஜய்யுடன் மட்டும் ஜோடி சேர்ந்து நடிக்கவேயில்லை.