அஜித் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அஜித் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

என்னை அறிந்தால் படம் வெளியீடு தள்ளி போடப்பட்டது.

அஜீத் ரசிகர்களுக்கு, இந்த புத்தாண்டு இரட்டிப்பு மகிழ்ச்சியையும், சோகத்தையும் கொடுத்துள்ளது. அதாவது, (ஜனவரி 1ம் தேதி) என்னை அறிந்தால் படத்தின் டிரைலரும், பாடல்களும் வெளியாகி, அஜீத் ரசிகர்கள் புத்தாண்டை மகிழ்ச்சிகரமாக கொண்டாடி வரும் வேளையில் பொங்கலுக்கு, என்னை அறிந்தால் படம் வெளிவராது என்ற தகவலை சொல்லி அவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளனர்.

  முதன்முறையாக அஜீத், கௌதம் மேனன் இயக்கத்தில் நடித்து வரும் படம் என்னை அறிந்தால். அஜீத் ஜோடியாக த்ரிஷா, அனுஷ்கா ஆகியோர் நடித்து வருகின்றனர். ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். ஏ.எம்.ரத்னம் தயாரித்துள்ளார். முன்னதாக இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் இடத்தில் மாஸ் வரவேற்பு கிடைத்தது.

என்னை அறிந்தால் டிரைலர்

இலங்கையில் அஜித்துக்கு ரசிகர்கள் கூட்டம்

இலங்கையில் உள்ள தமிழர்கள் தீவிரமாக தமிழ்ப்படங்களை ரசிப்பவர்கள்.  நம் ஹீரோக்களை கொண்டாடுபவர்களும் அவர்கள்தான்.  அதே நேரம் இலங்கை தமிழ் மக்கள் மத்தியில் கடந்த காலங்களில் செல்வாக்கு பெற்றவராக இருந்தவர் எம்.ஜி.ஆர். மட்டுமே.  எம்.ஜி.அர். நடிகராக இருந்த காலகட்டத்தில் இலங்கையில் அவருக்கு 40 அடி கட் அவுட் வைக்கப்பட்டது.

சினிமா நடிகர்களுக்கு கட் அவுட் வைக்கப்பட்ட விஷயத்தில் எம்.ஜி.ஆருக்கு 40 அடி உயரத்தில் கட்அவுட் வைக்கப்பட்டதே இலங்கையைப்பொருத்தவரை சாதனையாக இருந்தது.  அந்த சாதனை அஜித்தினால் முறியடிக்கப்பட்டது.  அதாவது யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு திரையரங்கில் அஜித்தின் ஆரம்பம் படம் திரையிடப்பட்டபோது 58 அடி உயரத்தில் கட் அவுட் வைத்தனர்.

மகள் பள்ளியில் கேமராவுடன் சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்த அஜீத்

தமிழ்நாட்டின் மோஸ்ட் சென்ஷேசனல் விஐபி அஜித். அவர் பேசாவிட்டாலும் அவரைப் பற்றியும், அவரது படத்தை பற்றியும் எல்லோரும் பேசிக்கொண்டிருக்கின்றார்கள். என்னை அறிந்தால் படம் எப்போதும் வரும் என்று எல்லோரும் பரபரத்து கிடக்கின்றார்கள். அடுத்த படத்துக்கு கால்சீட் தருவாரா என்று கோடிக்கணக்கான பணத்தை மடியில் கட்டிக்கொண்டு வரிசையில் நட்கின்றார்கள் தயாரிப்பாளர்கள்.

அவர் முகத்தை ஒரு முறை பார்த்து விட மாட்டோமா என்று தவமிருக்கும் ரசிகர்கள். இத்தனைக்கும் நடுவில் ஒரு தந்தையாக தன் பங்கை சரியாக செய்திருக்கின்றார் அஜித். சுமாராக வேலையில் இருந்து கொண்டு சில ஆயிரம் சம்பாதிப்பவர்கள்கூட பெற்ற மகளை கவனிக்க நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கின்றார்கள்.

த்ரிஷாவுக்கு புகை பகையாம்!

பிராணிகளின் தோழியான த்ரிஷா, யாராவது தெருநாய்களை கல்லைக் கொண்டு எரிவது, கொடுமைப்படுத்துவதைப் பார்த்தால் பொங்கி எழுந்து விடுவார். அதோடு, தான் அமர்ந்திருக்கும் பகுதியில் யாராவது புகை பிடிப்பதைப் பார்த்தாலும் கொதித்து எழுந்து விடுவாராம்.

உடனே அந்த நபரை அழைத்து, நாலு பேர் இருக்கிற இடத்துல இப்படி ரயில் வண்டி மாதிரி புகையை தள்ளுறீங்களே நியாயமா? இதனால் உங்களுக்கு ஒன்னும் பிரச்சினை இல்லை எங்களுக்குத்தான் பிரச்சினை. நீங்க தம் அடிக்கிறதுக்கு நாங்க நோயாளி ஆகனுமா? என்று லெப்ட் அண்ட் ரைட் வாங்கி விடுவாராம்.

அஜித்தின் 55வது பட டைட்டில் என்னை அறிந்தால்...

ஒரு வாரம் முன்னர் வரை சமூக வலைத்தளங்களில் பலரும் பேசிய விஷயமாக கத்தி படம்தான் இருந்து வந்தது. கத்தி வருமா, வராதா என்பதில் ஆரம்பித்த விஷயம், கத்தி படத்தின் கலெக்ஷன் எவ்வளவு என்பது என்று நேற்று வரை விவாதிக்கப்பபட்டு வந்தது. ஆனால், நேற்று நள்ளிரவு 12 மணி முதல் அந்த விவாதங்கள் அப்படியே என்னை அறிந்தால் படத்திற்கு திரும்பிவிட்டது.

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித், அனுஷ்கா, த்ரிஷா மற்றும் பலர் நடித்து வரும் படத்தின் டைட்டில் என்னை அறிந்தால் என்பது 30ம் தேதி 12 மணி ஆனதும் அறிவிக்கப்பட்டது.படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே டிவிட்டரில் என்னை அறிந்தால் தலைப்பு டிரெண்டிங்கில் வந்து விட்டது.

அஜீத் படத்திலும் 3வது நாயகியான பார்வதி நாயர்!

மலையாளம், கன்னடத்தில் அரை டஜன் படங்களுக்கு மேல் நடித்துவிட்டு தமிழுக்கு வந்திருப்பவர் பார்வதி நாயர். ஏற்கனவே ஜெயம்ரவி நடித்த நிமிர்ந்து நில் படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்த இவர், அதையடுத்து ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல் நடித்துள்ள உத்தமவில்லன் படத்தில் நடித்திருக்கிறார். இதே படத்தில் கமலுடன் பூஜா குமார், ஆண்ட்ரியா என இரண்டு விஸ்வரூபம் பட நாயகிகள் நடித்திருக்கிறார்கள்.

இருப்பினும், அந்த படத்தில் மூன்றாவது நாயகி போன்று ஒரு வித்தியாசமான வேடத்தில் பார்வதி நாயரும் நடித்திருக்கிறார். அதோடு, இந்த படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே, கெளதம்மேனன் இயக்கத்தில், அஜீத் நடித்து வரும் அவரது 55வது படத்திலும் பார்வதி நாயருக்கும் ஒரு கேரக்டர் கிடைக்க அந்த வேடத்திலும் நடித்து விட்டார். மேலும், இந்த படத்திலும் த்ரிஷா, அனுஷ்கா என இரண்டு மெகா நடிகைகள் இருக்க, 3வது நாயகி ரோலுக்கே கமிட்டாகியிருக்கிறாராம் பார்வதி நாயர்.

அஜீத்துக்காக காத்திருக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்!

தீனா, ரமணா, கஜினி ஆகியவை ஏ.ஆர்.முருகதாஸின் சினிமா கேரியரில் மிக முக்கியமான படங்கள். இதில் தீனாவில் அஜீத் நடித்திருந்தார். அதையடுத்து, விஜயகாந்த் ரமணாவில் நடித்தார். அந்த படத்திற்கான கதையை விஜயகாந்திடம் சொல்லும்போதே இந்தந்த காட்சிகளுக்கு தியேட்டரில் ஆடியன்ஸ் கைதட்டி ஆரவாரம் செய்வார்கள் என்று அவர் சொன்னது பின்னர் அப்படியே நடந்திருக்கிறது. அதையடுத்து, ரமணா படத்தை தெலுங்கில் ஸ்டாலின் என்ற பெயரில் சிரஞ்சீவியை வைத்து இயக்கினார்.

கஜினியை இந்தியில் அமீர்கானை வைதது இயக்கினார். ஆக மூன்று படங்களிலேயே இந்திய அளவில் பேசப்படும் இயக்குனராகி விட்டார் முருகதாஸ். அதன்பிறகு ஏழாம் அறிவு, துப்பாக்கி, இப்போது கத்தி என மெகா படங்களாக மெகா ஹீரோக்களை வைத்து இதுவரை இயக்கியிருக்கிறார். இந்தநிலையில், ஒரு மேடையில் கமல் எதிரிலேயே அவரை வைத்து படம் இயக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை சொன்ன ஏ.ஆர்.முருகதாஸ், தற்போது தனது முதல் பட நாயகனான அஜீத்தை வைத்து மீண்டும் படம் பண்ணவும் தான் ஆர்வத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளர்.

அஜீத்தை கேட்ச் பண்ணுகிறார் ஹன்சிகா!

தற்போதைய புது வரவு நடிகைகள் அனைவருக்குமே அஜீத்துடன் ஒரு படத்திலேனும் இணைந்து நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது. அது சிலருக்கு மட்டுமே நிறைவேறுகிறது. பலருக்கு நிராசையாகி விடுகிறது.அந்த வகையில் தற்போது பீல்டில் இருக்கும் முன்னணி நடிகைகளான த்ரிஷா, நயன்தாரா இருவரும் அஜீத்துடன் சில படங்களில் நடித்து விட்டனர்.
அதேபோல் தமன்னாவுக்கு வீரம் படத்தில் லக் அடித்தது. அதையடுத்து அனுஷ்காவுக்கு தற்போது அவரது 55வது படத்தில் கிடைத்திருக்கிறது. ஆனால், ஹன்சிகாவுக்கு வேலாயுதம் படத்தையடுத்து தற்போது சிம்புதேவன் இயக்கும் படம் என இரண்டு படங்களில் விஜய்யுடன் நடிக்க சான்ஸ் கிடைத்து விட்டபோதும், அஜீத்துடன் மட்டும் ஒரு படத்தில்கூட நடிக்க சான்ஸ் கிடைக்கவில்லை.

மீண்டும் புலனாய்வு போலீஸ் கெட்டப்பில் அஜீத்!

கெளதம்மேனன் இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் அவரது 55வது படத்தின் தொடக்கத்தில் மங்காத்தா, ஆரம்பம், வீரம் படங்களில் நடித்தது போலவே சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைல் கெட்டப்பிலேயே நடித்து வந்தார். சென்னை ஈசிஆர் சாலையில் பெரும்பாலும் இரவு நேரங்களாக அவர் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தது. அவருடன் சில நாட்களில் அனுஷ்காவும் பங்கேற்றார்.

ஆனால் ஒரு கட்டத்தில் சென்னையில் இருந்து இடம் பெயர்ந்த யூனிட், சிக்கிம், ராஜஸ்தான், சண்டிகர், ஜோத்பூர் உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தி வந்தது. சில மாத இடைவெளிக்கு பிறகு ஆரம்பித்த அப்படப்பிடிப்பில் இளமையான கெட்டப்பில் அஜீத் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன.

அஜித்துடன் நடிக்க ஆசைப்படும் ஹன்ஷிகா!....

நடிகைகளைப் பொறுத்தவரை காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ள வேண்டும். அதாவது சினிமாவில் வாய்ப்புகள் கிடைத்துக்கொண்டிருக்கும்போதே சம்பாதித்துக்கொள்ள வேண்டும், அதேபோல், தங்களது பேவரிட் ஹீரோக்களுடனும் டூயட் பாடிக்கொள்ள வேண்டும். அதை தவற விட்டால், கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத கதைதான்.

இது குழந்தை நட்சத்திரமாக நடித்ததில் இருந்தே சினிமாவையும் படித்து வரும் ஹன்சிகாவுக்கு தெரியாமல் இருக்குமா என்ன? தமிழில் மாப்பிள்ளை படத்தில் தனுசுடன் நடித்தபடி கோடம்பாக்கத்துக்குள் வந்த அவர், பின்னர், விஜய், சூர்யா, ஜெயம்ரவி, சித்தார்த், ஆர்யா, சிம்பு, கார்த்திக், உதயநிதி என பல ஹீரோக்களுடன் நடித்து விட்டார்.

குத்து சண்டை பயிற்சியில் ஆர்வம் காட்டும் அஜீத்

சினிமாவில் நடிப்பதற்கு முன்பிருந்தே பைக் ரேஸ், கார் ரேஸில் தீவிர ஆர்வம் காட்டி வந்தவர், அஜீத். ஒரு கட்டத்தில், சினிமாவில் பிசியான போதும், அவ்வப்போது பந்தயங்களில் கலந்து கொண்டு வந்தார், அஜீத்.அதன் காரணமாக, பலமுறை விபத்துகளையும் சந்தித்தார்.

இதனால், தொடர்ந்து சினிமாவில் நடிப்பதற்கு தடை, தாமதம் ஏற்பட்டதால், சமீபகாலமாய் பந்தயங்களில் கலந்து கொள்வதை தவிர்த்துவிட்ட அஜீத், அவ்வப்போது, தன் 'டு காட்டி' பைக்கில், சென்னைக்கு அருகாமையில் படப்பிடிப்பு நடந்தால், விசிட் அடித்து பைக் ஓட்டும் ஆசையை தீர்த்துக்கொள்கிறார்.

அஜித் - த்ரிஷாவுக்கான ரொமான்டிக் பாடல் ரெடி!

அஜித் - கௌதம் மேனன் கூட்டணியில் உருவாகி வரும் புதிய படத்திற்கு இன்னும் அதிகாரபூர்வமாக தலைப்பு வைக்கவில்லை. இப்படத்தின் தலைப்பு என்னவாக இருக்கும் என்று அஜித்குமாரின் ரசிகர்களிடையே மிகப் பெரும் எதிர்பார்ப்பு நிலவிவருகிறது.

இந்நிலையில் இப்படத்திற்கான தலைப்பை ஆகஸ்ட் முதல் வாரத்தில் அறிவிக்க இருக்கிறார்களாம். எப்போதும் தனது படங்களுக்கு தமிழில் கவித்துவமான தலைப்புகளை வைப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார் கௌதம் மேனன். எனவே தன் பாணியில் அஜித் நடிக்கும் இந்தப்படத்திற்கும் அப்படிப்பட்ட ஒரு தலைப்பை வைக்க வேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறார் கௌதம் மேனன்.

இரவு தூக்கத்தை மறந்து விட்டாராம் நம்ப தல அஜீத்!

மங்காத்தா, ஆரம்பம், வீரம் படங்களின் வெற்றியைத் தொடர்ந்து தனது 55வது படத்தில் உற்சாகமாக நடித்துக்கொண்டிருக்கிறார் அஜீத். முன்பெல்லாம் தனது படங்களில் நடித்துக்கொண்டிருக்கும்போது அதிக இடைவெளி எடுத்துக்கொள்ளும் அஜீத், முந்தைய படங்கள் கொடுத்த வெற்றி காரணமாக ஜெட் வேக உற்சாகத்துடனும் விறுவிருப்புடனும்  நடித்துக்கொண்டிருககிறார்.

ஆரம்பத்தில் சென்னை ஈசிஆர் சாலை பகுதியில் இரவு நேரங்களில் படப்பிடிபபு நடத்தி வந்த கெளதம்மேனன், பின்னர் வெளிநாடுகளுக்கு சென்று பாடல்களை படமாக்கி விட்டு வந்தவர், மறுபடியும் இரவு நேரங்களில் படப்பிடிப்பை முடுக்கி விட்டுள்ளார். சென்னையை சுற்றி நடக்கும் கதையை மையமாகக்கொண்ட படம் என்பதால், பெரும்பாலான காட்சிகளை ஈசிஆர் சாலையிலேயே படமாக்குகிறார்கள்.

தல அஜித்துடன் இணைந்து கலக்கவிருக்கும் சிம்பு!

தல அஜீத்தின் தீவிரமான ரசிகர் சிம்பு. அதை நிரூபிக்கும் வகையில், அஜீத் நடிக்கும் படங்களை முதல் நாள் முதல் ஷோ பார்த்து விடும் ரசிகராக இன்றுவரை இருந்து வருகிறார். அதோடு, பேட்டிகளிலும் தன்னை கவர்ந்த ஒரே நடிகர் அஜீத் என்றும் ஓப்பன் ஸ்டேட்மென்ட் விட்டு வரும், சிம்புவுக்கு அஜீத்துடன் இணைந்து ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்பது அவரது நீண்டகால கனவு. அது கெளதம்மேனன் இயக்கும் ஒரு படத்தில் கைகூடுவதாக இருந்தது. ஆனால், என்ன நினைத்தாரோ, அஜீத்தின் 55வது படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்ததும் அந்த பட முயற்சியையே கிடப்பில் போட்டு விட்டார் கெளதம்.