சிறுகதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிறுகதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சமயோசித சிந்தனை உள்ள மனிதன்.

ரயில் மிக வேகமாகச் சென்று கொண்டிருந்தது. அப்போது ரயில் ஜன்னல் வழியே ‘குபுகுபு’வென்று வீசிக் கொண்டிருந்த காற்றை பெட்டியில் இருந்த பயணிகள் அனைவரும் நன்றாக அனுபவித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அந்தப் பெட்டியில் ஜன்னல் ஓரமாக இருந்த ஒருவர் சந்தோஷத்தில் ஜன்னலுக்கு வெளியே தன் கையை நீட்டி ஆட்டி அசைத்து மகிழ்ச்சியை அனுபவித்துக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் அவர் கையில் அணிந்திருந்த விலை உயர்ந்த கைக்கடிகாரம் சட்டென்று கழன்று கீழே விழுந்துவிட்டது.

உலகிலேயே பேரழகி 'அம்மா' தான்.

ஒரு தெருவில் ஒரு குழந்தை அழுது கொண்டு இருந்தது.அப்போது அங்கே இருப்பவர்கள் அந்த குழந்தையிடம் வந்து ''ஏன் அழுகிறாய் ''என்று கேட்டனர்,என் அம்மாவை காணவில்லை என்றது,அவர்கள் அனைவரும் உன் அம்மா எப்படி இருப்பாள் என்றார்கள். 'அதற்கு அந்த குழந்தை 'என் அம்மா அழகாக இருப்பார்கள் ''என்றது.இதை அனைவரும் அந்த நாட்டின் மன்னனிடம் கூறினார்கள்.

அப்போது மன்னர் அந்த ஊரில் உள்ள அணைத்து அழகான பெண்களையும் வர சொல்லி அந்த குழந்தையிடம் காட்டினார். அவர்கள் அனைவரையும் பார்த்து விட்டு இவர்கள் எல்லாரையும் விட என் அம்மா அழகாக இருப்பாள் என்றது.

ஆபத்தான சிட்டுக்குருவியின் ஆசை.

இரண்டு தூக்கணாங்குருவிகள் கூடு கட்டி வசித்து வந்தன. ஒருநாள் அவை இரண்டும் இரை தேட வெளியே போயிருந்த நேரத்தில், ஒரு சிட்டுக்குருவி பறந்து வந்து தூக்கணாங்குருவியின் கூட்டுக்குள் நுழைந்துகொண்டது. சிறிது நேரத்தில் ஒரு தூக்கணாங்குருவி பறந்து வந்தது. கூட்டுக்குள் தலையை நுழைத்தது. கூட்டுக்குள் சிட்டுக்குருவி இருப்பதைப் பார்த்துவிட்டு, "குருவி அக்கா. எங்கள் வீட்டில் நுழைந்து எனக்கு இடமில்லாமல் பண்ணிவிட்டாயே. தயவுசெய்து வெளியே போய்விடு" என்று கெஞ்சிக் கேட்டுக்கொண்டது.

ஜனனியின் பொய்.

வனித்தா ஆன்ட்டி ஒருமுறை செக்கச்செவேல் என்று பழுத்திருந்த ஸ்டோபரி பழங்களை வாங்கினாள். ஆன்ட்டிக்கு வினய், கார்த்திக், ஜனனி என்று மூன்று குழந்தைகள் உள்ளனர். குழந்தைகள் சாப்பிட்ட பிறகு பழங்களைத் தரலாம் என்று ஆன்ட்டி நினைத்தாள்.

பழங்கள் மேஜைமீது ஒரு தட்டில் இருந்தன. ஜனனி இதுவரை ஸ்டோபரி பழத்தைச் சாப்பிட்டதேயில்லை. ஆசையோடு அவற்றை வாசனை பார்த்தாள்.