அழகிய முகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அழகிய முகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

அழகைக் கூட்ட வயது தேவையில்லை.

25 பிளஸ்சில் இருக்கும் ஒவ்வொரு பெண்ணும்  அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் இவை. ‘50 பிளஸ் நெருங்குபவர்கள்தான் வயதானவர்கள்’ என்கிற பார்வை உங்களுக்கு  இருக்கலாம். ஆனால், முதுமைத்தோற்றம் என்பது உங்கள் சருமத்தையும் கூந்தலையும் 25 வயதிலிருந்தே விரட்ட ஆரம்பிக்கிற உண்மை தெரியுமா?

‘‘நமது சருமம், 20 வயதில் இருப்பது மாதிரி 40 வயதிலோ, 40ல் இருப்பது மாதிரி 60 வயதிலோ இருப்பதில்லை. 20களின் தொடக்கத்தில்,  சருமத்தின் செல்கள், மீள்தன்மையையும் ஈரப்பதத்தையும் இழக்கத் தொடங்கும்.

அழகிய முகத்தை தரும் மரக்கறி,பழ வகைகள்.

இளமையோடும், அழகுடனும் இருக்கவேண்டும் என்பதே அனைத்து தரப்பு பெண்களின் எண்ணம். கண்களுக்கு கீழே கருவளையமோ, முகத்தில் லேசாக சுருக்கமோ ஏற்பட்டாலோ உடனே அழகு நிலையங்களுக்குச் சென்று ஆயிரக்கணக்கில் செலவழித்து முகத்தை அழகு படுத்திக்கொள்பவர்கள் இருக்கின்றனர்.

இரசாயனங்கள் நிறைந்த அந்த பொருட்களை பயன்படுத்தினால் பக்க விளைவுகள் ஏற்படுவது வழக்கம். ஆனால் பணம் அதிகம் செலவு செய்யாமல் அன்றாடம் சமையலுக்கு வாங்கும் பொருட்களை வைத்தே அழகுப்படுத்தலாம் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். இதனால் செலவும் மிச்சமாகும்.

அழகிய முகத்துக்கு இன்னும் அழகை அதிகரியுங்கள்.

பெண்களுக்கு அழகு என்றாலே அதில் பிரதானம் முக அழகுதான். எனவே, முகத்தை பராமரிக்க பல விதங்களில் முயற்சிப்பர். ஆனால், சில சின்ன சின்ன கவனக்குறைவுகளால் முக அழகு குறையலாம்.

தவறான சோப்புகளைப் பயன்படுத்துதல்..

பொதுவாக பெண்கள் அவர்களது சருமத்தைப் பற்றி நன்கு அறிந்து கொள்ள வேண்டும். எண்ணெய் சருமம், வறண்ட சருமம் என தெரிந்து அதற்கேற்ற சோப்பு அல்லது முகம் கழுவும் க்ரீம்களை பயன்படுத்த வேண்டும்.

எல்லோருக்கும் ஏற்ற வெள்ளரிக்காய் மாஸ்க் .

வெள்ளரி எல்லா சருமத்தினருக்கும் மிக நல்லதாகும்.வெள்ளரி சாறு கண்களின் ஓரங்களில் உள்ள கரு வளையங்களை நீக்க உதவும். இது பொலிவை ஊட்டுவதோடு குளிர்ச்சியையும் தருகிறது.

மாஸ்க்உபயோகிக்கும் முறை

முடியை கெட்டியாக முடிந்து கொள்ளவும். தூய்மையான நீரைக் கொண்டு நன்றாக முகத்தைக் கழுவிக் கொள்ளவும்.

வெள்ளரிக்காய், தேன்,மற்றும் புதினா என்பவற்றை எலுமிச்சைப்பழசாற்றுடன் கலந்து பேஸ்ட் செய்து கொள்ளவும்.

எண்ணெய் பசையான சருமத்திற்கான குறிப்புகள்.

* எண்ணெய் பசை சருமத்திற்கும் விட்டமின் பி5,பி2 பற்றாக்குறைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. எனவே, இந்த விட்டமின்கள் அதிகளவு நிறைந்த பீன்ஸ் மற்றும் பருப்புகளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

* எண்ணெய் பசை சருமத்திற்கு ஹார்மோன்களே காரணமாவதால்  இத்தகைய சருமத்தினர், ஹார்மோன் சமநிலையை ஏற்படுத்துவது முக்கியம்.

* பழங்கள், காய்கறிகள் மற்றும் போதுமான அளவு நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.

அழகியாக ஜொலிக்க சில தகவல்கள்.


புதினா, தக்காளி, தயிர், உருளைக் கிழக்கு, தேங்காய்ப்பால்... இவையெல்லாம் சாப்பிடுவதற்கில்லை... இதில் சிம்பிளான அழகு குறிப்புகளும் உண்டு. இந்த ரெசிபிக்களை தொடர்ந்து உபயோகப்படுத்தி வர சாதாரண முகமும் சூப்பராகும்!ஒரு டேபிள் ஸ்பூன் பொடித்த ஓட் ஸ§டன், சிறிது தண்ணீர் கலந்து முகத்தில் தடவி பதினைந்து நிமிடம் கழித்து முகம் கழுவிப் பாருங்கள். களையிழந்த முகத்துக்கும் ஒரு ஜொலிப்பு கிடைக்கும். இந்த ரெசிபியை வாரம் ஒருமுறை போட்டுக்கலாம்.சிறிது புதினாவுடன் தயிர் கலந்து மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

முகத்திற்கான இயற்கை மருத்துவம்.

அதிக எண்ணெய் பசை இருந்தால் முகத்தில் பரு வர வாய்ப்புகள் அதிகம். ஆகையால் எண்ணெய் பசையில்லாத முகத்தை பெற 1 டீஸ்பூன் ஆரஞ்சு பழச்சாறை 1 டீஸ்பூன் குளிர்ந்த நீரில் கலந்து முகத்தில் தடவி 1/2 மணி நேரம் ஊறிய பிறகு மிருதுவாக துடைக்கவும்.

பருவை விரலால் கிள்ளாதீர்கள். கிள்ளினால் முகத்தில் மாறாத வடுக்கள் விழுந்துவிடும்.எருமைப்பால் ஆடையை இரவில் பருவின் மேல் தடவுங்கள். காலையில் எழுந்ததும் சோப்புப் போட்டு முகத்தைக் கழுவினால் பரு போய்விடும்.

முகத்தின் முடிகள், கரும்புள்ளி நீக்க வழிகள்

மஞ்சளை நன்றாக அரைத்து இரவில் முகத்தில் பூசவும். காலையில் சுடுநீரில் கழுவினால், பப்பாளிக் காய், மஞ்சள் சேர்த்து அரைத்து முகத்தில் தேய்த்தாலும் முகத்தில் இருக்கும் ரோமங்கள் நீங்கும். கஸ்தூரி மஞ்சளை அரைத்து பாலாடை கலந்து பூசி வந்தால் முகத்தில் இருக்கும் முடிகள் மறையும்.சிறுபயறு தோலை பசும்பாலில் கலந்து, அதனுடன் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசினால் முகத்தில் இருக்கும் ரோமங்கள் மறையும்.

வாழைப்பழத்தை மசித்து பால் கலந்து முகத்தில் பூசி, சில நிமிடங்கள் கழித்து தண்ணீரால் கழுவினால், முகம் பொலிவுடன் காணப்படும்.பாதாம் பருப்பு, தேன் மற்றும் தயிர் ஆகியவற்றை சம அளவு எடுத்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால், முகத்தின் பொலிவு அதிகரிக்கும்.தேன் மற்றும் பால் கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவினாலும், முகம் பொலிவுடன் காணப்படும்.

அழகிய முகம்

கண்களிலுள்ள கருவளையம் மறைய பஞ்சுத் துண்டை பன்னீரில் நனைத்து பத்து நிமிடங்களுக்கு கண்களை சுற்றி வைக்கவும்.

உள்ளங்கைகள்  கடின தன்மையாக உள்ளவர்கள் ஆலிவ் எண்ணையுடன் சர்க்கரை கலந்து தேய்த்து  கழுவி வர கைகள் மிருதுவாகும். 

ஆரஞ்சு பழ தோலை காயவிட்டு தூளாக்கி அதில் சிறிது பால் விட்டு குலைத்து முகத்தில் தடவி அரை மணி நேரம் விட்டு கழுவினால் வெயிலில் ஏற்பட்ட கருமை மாறி முகம் பிரகாசிக்கும்.