மஞ்சளை நன்றாக அரைத்து இரவில் முகத்தில் பூசவும். காலையில்
சுடுநீரில் கழுவினால், பப்பாளிக் காய், மஞ்சள் சேர்த்து
அரைத்து முகத்தில் தேய்த்தாலும் முகத்தில் இருக்கும் ரோமங்கள் நீங்கும். கஸ்தூரி மஞ்சளை
அரைத்து பாலாடை கலந்து பூசி வந்தால் முகத்தில் இருக்கும் முடிகள் மறையும்.சிறுபயறு தோலை
பசும்பாலில் கலந்து, அதனுடன்
எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசினால் முகத்தில் இருக்கும் ரோமங்கள் மறையும்.
வாழைப்பழத்தை மசித்து பால் கலந்து முகத்தில் பூசி, சில நிமிடங்கள்
கழித்து தண்ணீரால் கழுவினால், முகம் பொலிவுடன் காணப்படும்.பாதாம் பருப்பு, தேன் மற்றும்
தயிர் ஆகியவற்றை சம அளவு எடுத்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால், முகத்தின் பொலிவு
அதிகரிக்கும்.தேன் மற்றும்
பால் கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவினாலும், முகம் பொலிவுடன்
காணப்படும்.
