முகபரு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முகபரு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

முகப்பரு வருவதற்கான பிரதான காரணங்கள்.

இரவில் சருமத்தை சுத்தப்படுத்தாமல் இருப்பது இரவில் தூங்கும் போது கிளின்சர் பயன்படுத்தி முகத்தை நன்கு நீரில் கழுவிபின் மாய்ஸ்சுரைசர் தடவிக் கொண்டு தூங்க வேண்டும். தூங்கும் போது முகத்தை கழுவாமல் தூங்கினால்சருமத்துளைகளை அடைத்துள்ள தூசிகள் சருமத்தில் அப்படியே தங்கிஅவை பருக்களை ஏற்படுத்துவதுடன்முகத்தை பொலிவற்றதாக வெளிக்காட்டும்.

சரும பராமரிப்பு பொருட்கள் கடைகளில் விற்கப்படும் சரும பராமரிப்பு பொருட்கள் அனைவருக்குமே சிறந்ததாக இருக்கும் என்று சொல்ல முடியாது. சிலருக்கு அந்த பொருட்களே சரும துளைகளை அடைத்து பருக்களை ஏற்படுத்தும்.

முகப்பரு வராமல் தடுக்கும் வழிகள்.

பொடுகு தலையில் பொடுகு அதிகம் இருந்தால்அந்த பொடுகு முகத்தில் பட்டு பருக்களை ஏற்படுத்தும். எனவே பருக்கள் வருவதை தவிர்க்க வேண்டுமானால்முதலில் தலையை சுத்தமாக பொடுகின்றி வைத்துக் கொள்ள வேண்டும்.

எண்ணெய் பசை சருமம் பொதுவாக எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்குத் தான் பருக்கள் அதிகம் வரும். ஏனெனில் அவர்களின் முகத்தில் எண்ணெய் பசை அதிகம் இருப்பதால், தூசிகள் சருமத்தில் படிந்து, சரும துளைகளை அடைத்து, அதனால் பருக்களை ஏற்படுத்தும்.எனவே இத்தகையவர்கள், தினமும் மூன்று முறை ரோஸ்வாட்டர் கொண்டு முகத்தை துடைத்து எடுப்பதுடன், மைல்டு ஃபேஷ் வாஷ் பயன்படுத்தி முகத்தை கழுவ வேண்டும்.