அழகிய புருவங்கள். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அழகிய புருவங்கள். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

முகத்திற்கு ஏற்ற அழகிய புருவங்கள்.

கவிஞர்கள் பெண்களின் புருவத்தை வில்லென வளைந்த புருவம் என்று வில்லுக்கு ஒப்பிடுவார்கள். புருவமானது பெண்களின் முகத்தையே மாற்றி அழகாக்கும் தன்மை கொண்டது. சாதாரணமான இருக்கும் பெண்கள் கூட பியூட்டி பார்லர் சென்று புருவத்தை திருத்திய உடன் 50 சதவீதம் அழகாகி விடுகிறார். அந்த அளவிற்கு முகத்தின் வடிவமைப்பையே மாற்றும் தன்மை புருவத்திற்கு உண்டு. கண்களை பெரிதாக்கும் சில பெண்கள் பார்க்க அழகாக இருப்பார்கள். ஆனால் அவர்களது கண்களைப் பார்த்தால் இடுங்கிய மாதிரி இருக்கும். இப்படி இடுங்கிய மாதிரி இருப்பதற்கு புருவங்கள் திக்காக இருப்பதும் ஒரு காரணம் தான். புருவங்கள் திக்காக இருப்பவர்களுக்கு கண்கள் சிறியதாகத் தெரியுமே தவிர உண்மையில் அவர்களின் கண்கள் சரியான அளவில்தான் இருக்கும்.

முகத்திற்கு ஏற்ற புருவங்கள்.

முகத்தின் ஒட்டு மொத்த அழகைக் காட்டுவதில் புருவத்துக்கு ஈடு இணையில்லை என்றே சொல்லலாம். வில் போன்ற புருவம், தடிமனான புருவம்,அடர்த்தியான புருவம், கீற்று போன்ற புருவம் என்று வகைப்படுத்தி கூறலாம்.

முகத்துக்கும்  கண்களுக்ககும் ஏற்ப புருவத்தை ட்ரிம் செய்து கொள்ளுங்கள்.குறுகிய நெற்றி உள்ளவர்களுக்கு புருவங்களுக்குள் இடைவெளி அதிகம் இருக்கட்டும். அகன்ற மூக்கு உள்ளவர்கள் புருவங்களின் இடைவெளியை அதிகப்படுத்தாதீர்கள்.