மணப்பெண் அலங்காரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மணப்பெண் அலங்காரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மணப்பெண்ணுக்கு புடவை வாங்கும் போது கவனிக்கப்பட வேண்டியவைகள்.

திருமணம் என்பது ஒரு பெண்ணின் வாழ்க்கையில் நிலையான பந்தம். அந்த பந்தம் தான் கடைசி வரை அவளுடன் இருக்கும். எனவே இத்திருமணத்தில் தேர்ந்தெடுக்கபடும் துணைவன் சரியானவரா, துணைவி தமக்கு ஏற்றவளா என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் இருக்கும்.

இத்தகைய திருமணத்தில் துணைவன், துணைவி எவ்வளவு முக்கியமோ, அதுபோல மணமகன்,மணமகளின் உடையும் பார்க்கிறவர்களை கவர வேண்டும் என்று தான் எல்லோரும் நினைப்பார்கள்.

அதற்கு, நாம் சரியான புடவைகளை தேர்வு செய்ய வேண்டும். தன்னுடைய நிறத்திற்கு ஏற்றவாறு தேர்வு செய்ய வேண்டும். திருமணம் என்கிற நிகழ்வில் மணப்பெண்தான் ஹீரோயின். அத்தனை பேரின் பார்வையும் கவனமும் அவள் மீதுதான் இருக்கும்.

மடிசார் அணியும் பெண்ணுக்கான அலங்காரம்.

மடிசார் அணிகிற பெண்கள் கால்களுக்கான நகைகளிலும் கவனம் செலுத்த வேண்டும். சிலர்  இன வழக்கப்படி முகூர்த்தத்துக்கு நூல் புடவை அணிவது வழக்கம்.  அந்த நூல் புடவைக்கு கெம்ப் செட்தான் அல்லது கல் வைத்த செட் பொருத்தம். கொலுசும் மெட்டியும் அவர்களது கால்களின் அளவு மற்றும்  வடிவத்துக்குப் பொருந்துகிற மாதிரி இருக்க வேண்டும்.
சில்வர் கலரில் ஒர்க் செய்த  புடவைகளுக்கு ஒயிட் கோல்டில் அல்லது பிளாட்டினம் நகைகளைத் தேர்வு செய்யலாம்.ஆடம்பர வேலைப்பாடு செய்த புடவைகளுக்கு ஆரம் அணியக்கூடாது.ஏற்கனவே சேலையில் உள்ள அதிகமான வேலைப்பாடு, நகையின் அழகைக்  கெடுத்துவிடும். எனவே, சோக்கர் செட் அல்லது கல் வைத்த சிம்பிளான கழுத்தணியுடன் நிறுத்திக் கொள்ளலாம்.

மணப்பெண் அலங்காரத்தில் நகை தெரிவு.

இக்கால திருமணங்களில் அதிகளவு நாகரிக மோகம் இருந்தாலும் இன்னமும் முகூர்த்தத்துக்கு மட்டும் பாரம்பரிய நகை, உடைளைத்தான் பலரும் விரும்புகிறார்கள்.  திருமணத்துக்கு முன்பே ஹேர் ஸ்டைல், மேக்கப், எல்லாம் பொருத்தமாக இருக்கிறதா என இன்றைய  மணப்பெண்கள் ட்ரையல் பார்க்கிறார்கள். அதற்கு முன்பு திருமணச் சடங்குகள் அனைத்துக்கும்  பொருந்தக்கூடிய நகைகளைத் தேர்வு செய்ய வேண்டும்.திருமணத்துக்கான நகைகள் வாங்கும் போது கூடியவரையில் ஏற்கனவே தயாராக  உள்ள மாடல்களில் இருந்து தேர்ந்தெடுக்காமல், நகை வடிவமைப்பாளர்களிடம் திருமண உடைகளைக் காட்டி, அதே டிசைன் மற்றும் கலரில் செய்து  வாங்கலாம்.