மடிசார் அணிகிற
பெண்கள் கால்களுக்கான நகைகளிலும் கவனம் செலுத்த வேண்டும். சிலர் இன வழக்கப்படி முகூர்த்தத்துக்கு நூல் புடவை
அணிவது வழக்கம். அந்த நூல் புடவைக்கு கெம்ப்
செட்தான் அல்லது கல் வைத்த செட் பொருத்தம். கொலுசும் மெட்டியும் அவர்களது
கால்களின் அளவு மற்றும் வடிவத்துக்குப்
பொருந்துகிற மாதிரி இருக்க வேண்டும்.
சில்வர் கலரில்
ஒர்க் செய்த புடவைகளுக்கு ஒயிட் கோல்டில் அல்லது
பிளாட்டினம் நகைகளைத் தேர்வு செய்யலாம்.ஆடம்பர வேலைப்பாடு செய்த புடவைகளுக்கு
ஆரம் அணியக்கூடாது.ஏற்கனவே சேலையில் உள்ள அதிகமான வேலைப்பாடு, நகையின் அழகைக் கெடுத்துவிடும். எனவே, சோக்கர் செட் அல்லது கல் வைத்த சிம்பிளான
கழுத்தணியுடன் நிறுத்திக் கொள்ளலாம்.
