கருப்பான முகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கருப்பான முகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கருப்பாக இருப்பவர்களுக்கான அழகு குறிப்பு.

இந்த உலகில் அழகாக இருக்க வேண்டும் என்று நினைக்காதவர்கள் எவரும் இருக்க முடியாது. அவ்வாறு அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக அழகு நிலையங்களுக்குசென்று அழகுப்படுத்திக் கொள்கின்றனர். அதில் பெரும்பாலும் அழகு நிலையங்களுக்குச் சென்று அழகுப்படுத்துவதில் முதல் காரணமாக இருப்பது, கருப்பாக இருக்கிறோம் என்பதற்காகவே. இவ்வாறு கருப்பாக இருப்பதற்கு முதல் காரணம் உடலில் இருக்கும் நிறமி செல்களான மெலனின் அளவு அதிகமாக இருப்பது.

அவ்வாறு அதிக நிறமிசெல்கள் உடலில் இருந்தால் அந்த இடமானது கருப்பாக இருக்கும். சிலர் திடீரென்று கருப்பாக மாறுவார்கள், அதற்கு அவர்களது உடலில் உள்ள நிறமிச் செல்கள் அதிக அளவு மெலனினை சுரக்கும்.

கருப்பாக இருந்தாலும் கலையாக இருக்க வேண்டும்.

இன்றைய தலைமுறையினர், செக்கச் சிவந்த மேனியைத் தான், அழகு என்று போற்றி, அதை, பெரிதும் விரும்புகின்றனர்.

* கருப்பாக இருந்தாலும் கலையாக இருப்பவர்கள் பலர் உண்டு. ஒருவருக்கு வெள்ளை தோல் மட்டும் இருந்துவிட்டால் போதாது; முகம் கலையாக இருப்பது அவசியம். அப்படி முகமும், உடல் அமைப்பும் களையாக, வசீகரமாக இருந்தால் தான், ஒரிஜினல் அழகு. அந்த வகையில், விதவித அலங்காரங்களும், நகைகளும் கலையான கருப்பு தேகம் கொண்டவர்களுக்குத்தான் அதிகம் பொருந்தும்.