முடி பாராமரிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முடி பாராமரிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

எதனால் வழுக்கை விழுகிறது என தெரியுமா ?

குழந்தை முதல் பெரியவர்கள் வரைக்கும் இன்று தலைமுடிதான் ‘தலை’யாய பிரச்சினை. தலைமுடிப் பராமரிப்புக்காகக் காலம்காலமாக நாம் பின்பற்றி வந்த இயற்கை முறைகளைக் கைவிட்டு, செயற்கை அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்த ஆரம்பித்த பிறகு, தலைமுடியின் ஆயுள் குறைந்துவிட்டது. முன்பு 60 வயதுக்கு மேல் விழுந்த வழுக்கை, இப்போது 30 வயதிலேயே விழ ஆரம்பித்துவிடுகிறது.

முடியின் வளர்ச்சி

முடி என்பது ஒரு புரத இழை. கரோட்டின் எனும் புரதத்தால் ஆனது. ‘ஃபாலிக்கிள்’ (Follicle) எனும் முடிக்குழியில் இருந்து வளரக்கூடியது.

ஹேர் ட்ரையர் பாவித்தால் இவ்வளவு ஆபத்தா?

இன்றைய அவசரக் காலத்தில் சரியாக சாப்பிடத்தான் நேரம் இல்லையென்று பார்த்தால், தலைக்கு குளித்தால் கூட கூந்தலை காய வைக்க நேரம் இல்லாமல் இருக்கிறது. அதனால் கூந்தலை காய வைப்பதற்கு என்று ஒரு மிசினான ‘ஹேர் ட்ரையரை’ பயன்படுத்துகின்றனர்.

ஆனால் அவற்றை பயன்படுத்துவதால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் என்று நிறைய பேருக்கு தெரியவில்லை. இயற்கையாக கூந்தலை காய வைப்பது தான் கூந்தலுக்கு ஆரோக்கியமானது.

அதை விட்டுவிட்டு, அந்த கூந்தலுக்கு ஹேர் ட்ரையரை பயன்படுத்தினால்,
தற்போது அனைவரும் வருத்தப்படும் பிரச்சனையில் ஒன்றான கூந்தல் உதிர்தல் தான் அதிகம் ஏற்படும். அதுமட்டுமல்லாமல்வேறு என்ன பிரச்சனைகளையெல்லாம் சந்திக்க நேரிடும் என்பதையும் சற்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்…

நீண்ட கருமையான கூந்தல்வேண்டுமா?

* சீப்பு உங்களுக்கென்று தனியாக வைத்துக்கொள்ளவும். வாரத்தில் மூன்று தடவை அதைக் கழுவ வேண்டும். உலோகத்தால் ஆன சீப்புகளைத் தவிர்க்கவும். நல்ல மரச் சீப்பினால் அழுந்த வாரினால் மயிர்க் கால்களில் இரத்த ஓட்டம் அதிகமாவதோடு முடி வளர்வதும் தூண்டப்படுகிறது.

* தேங்காயைத் தண்ணீர் சேர்க்காமல் அரைத்துப் பால் பிழியவும். இதை இரும்புக் கடாயில் காய்ச்சினால் எண்ணெய் தனியாக வரும். அந்த எண்ணெயைத் தலையில் தடவி ஊறிய பின் சீயக்காய் அல்லது கடலை மாவு தேய்த்து அலசவும்.

* கூந்தல் வறண்டு இருந்தால் ஒரு கிண்ணத்தில் மருதாணிப் பொடி, தேங்காய்ப்பால், தேங்காய் எண்ணெயும் சேர்த்துக் குழைத்துத் தலையில் மசாஜ் செய்யவும். அரை மணி நேரம் கழித்துத் தலைக்குக் குளிக்கலாம்.

இருபாலாருக்குமான முடி பிரச்சனைகளும் தீர்வும்.

வழுக்கைத் தலை பிரச்சினையில் பெண்களை விட ஆண்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்னர். இதற்கு முக்கிய காரணம், ஆண்கள் பெண்களைப் போல், தங்கள் முடிக்கு போதிய பராமரிப்புக்களைகளை கொடுப்பதில்லை. இத்தகைய முறையான பராமரிபின்மையினால், ஆண்கள் இளம் பருவத்திலேயே முடி உதிர்தல் பிரச்சினைக்கு உள்ளாகி, வழுக்கையை பெறுகின்றனர்.

உண்மையில் ஆண்களை விட பெண்கள் தான் அதிக முடி உதிர்தல் பிரச்சினைக்கு ஆளாகின்றனர். ஆனால் பெண்கள் முடி உதிர்தல் பிரச்சினை ஆரம்பித்த உடனேயே, முடியை சரியாக பராமரிக்க ஆரம்பித்து விடுவதால், வழுக்கை தலை ஏற்படாமல் தப்பிக்கின்றனர்.

கோடைக்கால முடி பராமரிப்பு.

உச்சி என்பதை நடு மண்டை என்று பலரும் நினைக்கிறார்கள். தலையின் முன் நெற்றியில் முடி தொடங்கும் இடத்தில் குறுக்காக நான்கு விரல்களை வைக்கவேண்டும். அதில் நான்காம் விரல் வைக்கப்படும் இடமே உச்சியாகும். குழந்தையாக இருக்கும்போது மிக மென்மையாக துடிக்கும்பகுதி போல் தெரியுமே அதுதான் உச்சி. இந்த உச்சிக்கு ஈர்ப்பு சக்தி அதிகம். அதனால் அந்த இடத்தில் சிறிதளவு எண்ணெய் வைக்கும் பழக்கத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

“நமது கூந்தல் கறுப்பாக இருந்தாலும் அதனை பகுத்தாய்ந்து பார்த்தால்
பிரவுன், லைட் பிரவுன், நீலம், ஊதா, ஆரஞ்சு, சிவப்பு போன்ற நிறக்கலப்பு தெரியும். கோடை வெயில் தொடர்ந்து கூந்தலில்பட்டால் முதலில் நீல நிறம் மறையும்.

ஹேர் கலரிங் செய்பவர்களுக்கு முக்கிய தகவல்கள்.

கறுப்பான முடி இப்போது ஓல்டு ஃபேஷனாகிவிட்டது. நீலம்,பச்சை, மஞ்சள், ஆரஞ்சு என வாரத்துக்கு ஒரு கலரில் முடியை மாற்றுவது தான் இப்போதைய ஃபேஷன். இயற்கைக்கு மாறாக, தலைமுடியை செயற்கையான நிறத்துக்கு மாற்றுவது சரிதானா?

இது பற்றி அழகுக்கலை நிபுணர் சோபியா என்ன சொல்கிறார்?

பொதுவாக, ஹேர் கலரிங் என்பதே ஆபத்தானதுதான். பல்வேறு விதமான பக்க விளைவுகள் வர வாய்ப்பு உண்டு. முன்பெல்லாம், தலைமுடியில் நரை விழுந்தவர்கள் மட்டும்தான் ஹேர் கலரிங் செய்துகொள்வார்கள். ஆனால், இன்று டீன் ஏஜிலேயே கலரிங் செய்துகொள்கிறார்கள்.