முடி உதிர்தல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முடி உதிர்தல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

எதனால் வழுக்கை விழுகிறது என தெரியுமா ?

குழந்தை முதல் பெரியவர்கள் வரைக்கும் இன்று தலைமுடிதான் ‘தலை’யாய பிரச்சினை. தலைமுடிப் பராமரிப்புக்காகக் காலம்காலமாக நாம் பின்பற்றி வந்த இயற்கை முறைகளைக் கைவிட்டு, செயற்கை அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்த ஆரம்பித்த பிறகு, தலைமுடியின் ஆயுள் குறைந்துவிட்டது. முன்பு 60 வயதுக்கு மேல் விழுந்த வழுக்கை, இப்போது 30 வயதிலேயே விழ ஆரம்பித்துவிடுகிறது.

முடியின் வளர்ச்சி

முடி என்பது ஒரு புரத இழை. கரோட்டின் எனும் புரதத்தால் ஆனது. ‘ஃபாலிக்கிள்’ (Follicle) எனும் முடிக்குழியில் இருந்து வளரக்கூடியது.

ஹேர் ட்ரையர் பாவித்தால் இவ்வளவு ஆபத்தா?

இன்றைய அவசரக் காலத்தில் சரியாக சாப்பிடத்தான் நேரம் இல்லையென்று பார்த்தால், தலைக்கு குளித்தால் கூட கூந்தலை காய வைக்க நேரம் இல்லாமல் இருக்கிறது. அதனால் கூந்தலை காய வைப்பதற்கு என்று ஒரு மிசினான ‘ஹேர் ட்ரையரை’ பயன்படுத்துகின்றனர்.

ஆனால் அவற்றை பயன்படுத்துவதால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் என்று நிறைய பேருக்கு தெரியவில்லை. இயற்கையாக கூந்தலை காய வைப்பது தான் கூந்தலுக்கு ஆரோக்கியமானது.

அதை விட்டுவிட்டு, அந்த கூந்தலுக்கு ஹேர் ட்ரையரை பயன்படுத்தினால்,
தற்போது அனைவரும் வருத்தப்படும் பிரச்சனையில் ஒன்றான கூந்தல் உதிர்தல் தான் அதிகம் ஏற்படும். அதுமட்டுமல்லாமல்வேறு என்ன பிரச்சனைகளையெல்லாம் சந்திக்க நேரிடும் என்பதையும் சற்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்…

இருபாலாருக்குமான முடி பிரச்சனைகளும் தீர்வும்.

வழுக்கைத் தலை பிரச்சினையில் பெண்களை விட ஆண்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு முக்கிய காரணம், ஆண்கள் பெண்களைப் போல், தங்கள் முடிக்கு போதிய பராமரிப்புக்களைகளை கொடுப்பதில்லை. இத்தகைய முறையான பராமரிபின்மையினால், ஆண்கள் இளம் பருவத்திலேயே முடி உதிர்தல் பிரச்சினைக்கு உள்ளாகி, வழுக்கையை பெறுகின்றனர்.

உண்மையில் ஆண்களை விட பெண்கள் தான் அதிக முடி உதிர்தல் பிரச்சினைக்கு ஆளாகின்றனர். ஆனால் பெண்கள் முடி உதிர்தல் பிரச்சினை ஆரம்பித்த உடனேயே, முடியை சரியாக பராமரிக்க ஆரம்பித்து விடுவதால், வழுக்கை தலை ஏற்படாமல் தப்பிக்கின்றனர்.