டிப்ரஷன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
டிப்ரஷன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

டிப்ரஷனும் அதற்கான காரணங்களும்.

டிப்ரஷன் என்றால் என்ன ?...

சோகம், வேதனை,வருத்தம்,  நோயால் பாதிப்பு, மன தளர்ச்சி என்று எது வேண்டுமானாலும், "டிப்ரஷன்' என்று மருத்துவ அகராதியில் கூறப்படுகிறது. சில காரணங்களால் "டிப்ரஷன்' வருகிறது என்று டாக்டர்கள் கூறினாலும், மனதை சரிசமமாக வைத்துக் கொள்ளாமல், எப்போதும் உர்ர்ர்ர்... (கோவமான முகமாகவே) என்றிருப்பதும் இந்த பாதிப்பின் அறிகுறியே!

எந்த ஒரு கோளாறும் , குறிப்பிட்ட காலத்துக்கு மேல் நீடிக்கக் கூடாது; அப்படியிருந்தால் ஏதோ பெரிய வியாதிக்கு அறிகுறி.அதுபோல, மனத்தளர்ச்சி எந்த உருவில் வந்தாலும், நாட்கணக்கில் நீடித்தால், கண்டிப்பாக அதை உடனே கவனிக்க வேண்டும்.

நீங்கள் முகத்தை உம்முன்னு வைத்திருக்கிரவரா?

எந்த ஒரு கோளாறும், ரொம்ப நாள் நீடிக்கக் கூடாது; அப்படிபோனால் பெரிய சிக்கலுக்கு காரணமாகி விடும். அதேபோல், மனத்தளர்ச்சி (டிப்ரஷன்) பிரச்னையையும் உடனே கவனிக்க வேண்டும்.

டிப்ரஷன் என்றால், சோர்வு, வருத்தம், வேதனை என்று கூறலாம். மனதளவில் எந்த விதமான உணர்ச்சிகளும், இவற்றுக்கு வழி வகுத்தால் அது தான் டிப்ரஷன். சில சூழ்நிலைகள், சம்பவங்களால் டிப்ரஷன் வரலாம்.

எப்போதும் முகத்தை உம்மென்று வைத்திருந்தால், மனத்தளர்வு நோய் ஏற்படும்.உம்மனாமூஞ்சியாக இருக்காமல், சிரித்த முகமாக இருக்க வேண்டும்.