ராஜ்கிரண் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ராஜ்கிரண் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கொம்பன் படத்தில் ராஜ்கிரண்!

என் ராசாவின் மனசிலே, மாணிக்கம், பொன்னு வெளையுற பூமி என்று கிராமத்து நாயகனாக பல படங்களில் நடித்தவர் ராஜ்கிரண். ஒரு கட்டத்தில் தனது கதாநாயகன் மார்க்கெட் சரிந்ததும், பாலாவின் நந்தா படத்தில் இருந்து கேரக்டர் ஆர்ட்டிஸ்டாக உருவெடுத்தார். முக்கியமாக பாண்டவர் பூமி, தவமாய் தவமிருந்து, கோவில், சண்டக்கோழி போன்ற படங்களில் அழுத்தமான கதாபாத்திரஙக்ளில் நடித்து செண்டிமென்ட் நடிகராகவும் இடம் பிடித்தார்.

இந்த நிலையில், மஞ்சப்பை படத்தில் தாத்தா ரோலில் நடித்த ராஜ்கிரண், சிவப்பு படத்தில் ஒரு அதிரடியான வேடத்தில் நடித்திருக்கிறார். அதையடுத்து, மெட்ராஸ் படத்தைத் தொடர்ந்து கார்த்தி நடிக்கும் கொம்பன் படத்திலும் ஒரு முக்கியமான ரோலில் நடிக்கிறாராம். இந்த படத்தில் ஏற்கனவே மஞசப்பையில் நடித்த லட்சுமிமேனன் நாயகியாக நடிக்கிறார்.