சுனாமி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுனாமி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சுனாமி நினைவு நாளில் கயல்!

மைனா, கும்கி படங்களுக்குப் பிறகு பிரபுசாலமன் இயக்கியுள்ள படம் கயல். இந்த படத்தில் பொறியாளன் படத்தில் நாயகியாக நடித்த ஆனந்தி லீடு ரோலில் நடித்திருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பே திரைக்கு வரத் தயாராகி விட்ட கயல் படத்தை, கும்கி படத்தை வெளியிட்ட அதே டிசம்பர் மாதத்தில் வெளியிட திட்டமிட்டிருக்கிறாராம் பிரபுசாலமன்.

ஆனால், கும்கி டிசம்பரில் வெளியாகி வெற்றி பெற்றதால் அதே மாதத்தில் செண்டிமென்ட் கருதி இந்த படத்தை அவர் வெளியிடவில்லையாம் பிரபுசாலமன். டிசம்பரில் படத்தை வெளியிட முக்கிய காரணம், இந்த படம் சுனாமியை மையப்படுத்தும் கதையில் உருவாகியிருக்கிறதாம்.

சத்தமில்லாமல் உதவி செய்யும் நயன்தாரா!

சினிமா நடிகர் நடிகைகளில் இரண்டு ரகம் உண்டு. ஒன்று தாங்கள் செய்யும் உதவியை வெளியில் தெரியாமல் செய்வது. இன்னொன்று ஒரு லட்சம் உதவி செய்தால்கூட அதை பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்து 10 லட்சம் அளவுக்கு பப்ளிசிட்டியை தேடிக்கொள்வது. இதில் முதல் ரகத்தை சேர்ந்தவர்தான் நயன்தாரா.

இவர் இதுவரை செய்த உதவிகளில் சுனாமி நிவாரண நிதிக்காக 10 லட்சம் கொடுத்தது மட்டும்தான் வெளியில் தெரியும்.மற்றபடி தன்னைச் சுற்றியிருப்பவர்களுக்கு எவ்வளவோ உதவிகளை செய்திருக்கிறார் நயன்தாரா. ஆனால் அதையெல்லாம் அவர் வெளிக்காட்டிக் கொள்வதில்லை. வலது கை கொடுப்பது இடது கைககு தெரியக்கூடாது என்ற பாலிஸியை அவர் கடை பிடித்து வருகிறார்.