அனுஷ்க லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அனுஷ்க லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சரித்திர படங்களில் நடிக்க நயன்தாரா ஆர்வம்

நயன்தாராவுக்கு, தற்போது ஆக் ஷன் கதை களத்தை கொண்ட படங்கள் தான் அதிகமாக கிடைக்கின்றன. ஆனால், அவரின் கவனமோ சரித்திர கதைகள் பக்கம் திரும்பியுள்ளது. 'ராணி ருத்ரம்மா தேவி', 'பாகுபாலி' படங்களில் அனுஷ்கா நடித்து வருவதை சுட்டிக்காட்டி, அதுபோன்ற வேடங்களில் நானும் நடிக்க விரும்புகிறேன் என்றும், சில இயக்குனர்களிடம் வாய்ப்பு கேட்டு வருகிறார் நயன்தாரா.

அதோடு, 'ஸ்ரீராமராஜ்ஜியம்' தெலுங்கு படத்தில் சீதை வேடத்திற்காக தான் நந்தி விருது பெற்றதை, அவர்களுக்கு நினைவுபடுத்தும் நயன்தாரா, சினிமாவுக்காக கடுமையாக உழைக்கவும், ரிஸ்க் எடுக்கவும், நான் தயாராகி விட்டேன் என்றும் கூறிவருகிறார். அதனால் கூடிய சீக்கிரமே, சரித்திர படங்களில் நடிப்பதில் அனுஷ்காவுக்கு போட்டி நடிகையாக, நயன்தாராவும் உருவெடுப்பார் என்று தெரிகிறது.

படப்பிடிப்பில் பரபரப்பு: ஒன்றரை கிலோ தங்க நகை திருட்டு!

தமிழ் நாட்டில் வேலு நாச்சியார் போன்று ஆந்திராவில் சுதந்திரத்திற்காக ஆங்கிலேயரை எதிர்த்து போராடிய அரசி ராணி ருத்ரமாதேவி. அவரது வரலாறு திரைப்படமாக தயாரிக்கப்பட்டு வருகிறது. ராணி ருத்ரமாதேவியாக அனுஷ்கா நடித்து வருகிறார். சுமார் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்த படம் தயாராகி வருகிறது. காட்சிகள் யதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக அனுஷ்கா ஒரிஜினல் தங்க நகைகளை அணிந்து நடித்து வருகிறார்.

இதன் படப்பிடிப்புகள் ராணி ருத்ரமாதேவி ஆட்சி புரிந்த நானக்ராம்கூடர் என்ற பகுதியில் நடந்து வருகிறது. இதற்காக பெங்களூரில் இருந்து தயாரிப்பாளர் ஒன்றரை கிலோ தங்க நகைகளை வரவழைத்து இருந்தார்.

அனுஷ்கா ஒரிஜினல் நகை அணிந்தும், மற்ற நடிகர், நடிகைகள் கவரிங் நகைகள் அணிந்தும் நடித்து வந்தனர். படப்பிடிப்பு முடிந்ததும் இவை தனித்தனி பெட்டிகளில் வைக்கப்பட்டு அறையில் வைத்து பூட்டப்படுவது வழக்கம். அதேபோல நேற்று முன்தினம் (ஜூலை 19) மதிய உணவு இடைவேளையின் போது நகைகளை தனிதனி சூட்கேசில் வைத்து பூட்டி தனி அறையில் வைத்தனர்.