தற்போதைய கோலிவுட் சினிமாவில் காதல் இளவரசன் ஆர்யா தான். அந்த அளவுக்கு அவரை இளவட்ட நடிகைகளை முற்றுகையிடுவது, சினிமா மேடைகளில் மாறி மாறி முத்தம் கொடுப்பது என்றெல்லாம் அரங்கேற்றமாகிக் கொண்டிருக்கிறது.
மேலும், எந்த நடிகை கோடம்பாக்கத்திற்குள் என்ட்ரி ஆனாலும் அவர்களைத் தேடிப்பிடித்து நட்பு வளர்க்கும் ஆர்யா, பிக்கப் நடிகர் என்ற பட்டப்பெயரையும் சம்பாதித்து விட்டார்.
அந்த வகையில், ஆர்யாவின் பாசறைக்குள் நயன்தாரா, அனுஷ்கா, த்ரிஷா, டாப்சி, பூஜா, தமன்னா என பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. ஆனால் இப்படி நடிகைகளுடன் ஆர்யா ஜாலி ஆட்டம் போடுவதே அவரது திருமணத்திற்கு பெண் தேடுவதில் பெரிய சிக்கலாகியிருக்கிறதாம். அதனால் அவருக்கு எங்கு பெண் பார்த்தாலும், அவர் நடிகைகளுடன் உறவாடுவதை முன்வைத்து பெண் கொடுக்க மறுக்கிறார்களாம்.
குறிப்பாக, பிரபுதேவாவை திருமணம் செய்து கொள்ளயிருந்த நயன்தாரா, கடைசி நேரத்தில் அவரை பிரிந்து வந்ததோடு, ஆர்யாவின் அரவணைப்பில் இருந்து வருவதால், அவர்களுக்கிடையே டீப்பான உறவு இருப்பதாக சிலர் நேரடியாகவே சந்தேகத்தை கூறுகிறார்களாம். அதனால், இப்போது நயன்தாராவை அடிக்கடி சந்திப்பதை தவிர்க்கும் ஆர்யா, அவருடன் நடிப்பதையும் தவிர்த்து வருகிறார்.
இந்நிலையில், பாஸ் என்ற பாஸ்கரன் படத்தில் இரண்டாம் பாகத்தை தயாரித்து நடிக்கவிருக்கும் ஆர்யா, அதன் முதல் பாகத்தில் நடித்த நயன்தாராவையே மீண்டும் நடிகக வைக்க திட்டமிட்டிருந்தார். ஆனால், தனக்கு மணப்பெண் செட்டாகாமல் இருப்பதற்கு அவர்தான் காரணம் என்பதை தெரிந்த பிறகுதான், அவருக்குப் பதிலாக தமன்னாவை புக் பண்ணியிருக்கிறாராம். அதுமட்டுமின்றி, மீகாமன் படத்திலும் நயன்தாராவின் பெயர்தான் முதலில் அடிபட்டதாம். அதையடுத்து ஆர்யா புகுந்துதான் ஹன்சிகாவை உள்ளே இழுத்தாராம்.