நடிகர் ரஜினிகாந்த் தீவிர ஆன்மீகவாதி என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஒரு காலத்தில் ராகவேந்திரரின் பக்தராக இருந்தபோது அவர் பெயரிலேயே ஒரு படத்தில் நடித்தார். அதையடுத்து இமயமலைக்கு சென்று பாபாவை தரிசனம் செய்து வந்த ரஜினி, பாபா என்ற படத்திலும் நடித்தார். ஆக, சமீபகாலமாக ஒரு ஆன்மீக பழமாகவே மாறியிருக்கிறார் ரஜினி.
இதனால், படப்பிடிப்புகளில் ஓய்வாக இருக்கும்போது தன்னுடன் நடிக்கும் இளவட்ட நடிகர்-நடிகைகளிடமும் ஆன்மீகத்தில் தான் உணர்ந்ததை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வது ரஜினியின் பழக்கம்.
உடம்பையும், மனதையும் தூய்மையாக வைத்திருப்பது எப்படி என்றும் அவர்களுக்கு எளிதாக புரிய வைப்பார். அப்படி ரஜினியிடமிருந்து ஆன்மீக சிந்தனைகளை தற்போது பெற்றிருக்கிறார், லிங்கா படத்தில் அவருடன் நடித்து வரும் சோனாக்ஷி சின்ஹா.
இதுபற்றி சோனாக்ஷி விடுத்துள்ள செய்தியில், ரஜினி ஒரு நடிப்பு பல்கலைக்கழகம். எனக்கு நடிப்பு பற்றி நிறைய அறிவுரைகளை சொன்னார். அதையடுத்து ஆன்மீகத்தைப்பற்றி சொல்லியவர், கிட்டத்தட்ட எனக்குள்ளும் பக்தி விதையை ஊன்றி என்னையும் ஆன்மீகத்தில் திருப்பி விட்டார். அப்போதெல்லாம் என் கண்களுக்கு அவர் ஒரு மகான் போன்று தெரிந்தார்.
அந்த வகையில், அவர் சொன்ன ஒவ்வொரு ஆன்மீக விசயங்களும் புதுமையாக இருந்தது. அதை கேட்க கேட்க உடம்பு ஒரு கோயில் மாதிரி தெரிந்தது என்று கூறியுள்ள சோனாக்ஷி சின்ஹா, ரஜினியுடன் நடித்தபோது தவிர மற்ற நேரங்களில் அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது ஒரு மகானின் முன்பு அமர்ந்திருப்பது போன்ற உணர்வில் நான் இருந்தேன் என்கிறார்.