கையடக்கத்தொலைபேசி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கையடக்கத்தொலைபேசி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

"செல்போன் பேசினால் புற்றுநோய் வரும்" ஆய்வு முடிவு.

தினசரி செல்போன் பேசுவோருக்கு உடலில் பாதிப்புகள் ஏற்படும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் அவை உறுதி செய்யப்படவில்லை. இந்த நிலையில், இஸ்ரேலில் உள்ள டெல்அவில் பல் கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானி டாக்டர் யனிவ் ஹம்ஷானி தலைமையிலான குழுவினர் ஒரு புதிய ஆய்வு நடத்தினர்.

அதன்படி, அதிக நேரம் செல்போன் பேசுபவர்களை புற்று நோய் தாக்கும் அபாயம் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.இவர்கள் நீண்ட நேரம் செல்போன் பேசுபவர்களிடமும், செல்போன் பேசாதவர்களிடமும் இருந்து எச்சில் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது.

அவர்களில், அதிக நேரம் செல்போன் பேசுபவர்களுக்கு புற்று நோய் ஏற்படுவதற்கான அறிகுறி இருந்தது தெரிய வந்தது.

அதிக நேரம் செல்போன் பேசுபவருக்கான ஆபத்துகள்.

நீங்கள் நிறைய செல்போன் பேசுகிறீர்களா? ‘அதனாலென்ன… செல்போனால் கதிரியக்கப் பாதிப்பு ஏற்படுகிறது என்பது அறிவியல் ரீதியாக உறுதி செய்யப்படவில்லையே?’ என்றுதானே கூறுகிறீர்கள்? கதிரியக்கத்தாக்கம் வேண்டுமானால் உறுதிப்படுத்தப்படாமல் இருக்கலாம். ஆனால் வேறு பல பாதிப்புகள் ஏற்படுவது உண்மை.

அவை பற்றி… காது ஒரு நுட்பமான உறுப்பு. சாதாரணமாக 70 முதல் 75 டெசிபல் வரையுள்ள சத்தங்களைத்தான் நம் காதுகள் கேட்க வேண்டும். அதிகபட்சம் 90 டெசிபல்கள் வரை சத்தங்களைக் கேட்கலாம்.ஒரு நாளைக்கு அதிகபட்சம் நான்கு மணி நேரம் அப்படிக் கேட்டால் பரவாயில்லை. அதுவும் விட்டு விட்டுத்தான் கேட்க வேண்டும்.

மொபைல் போன் தண்ணீரில் விழுந்தால் சரி செய்யும் முறை.

மொபைல் போன்கள் நமக்கு மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்ட இந்த் காலத்தில் அவற்றை பாதுகாப்பாய் வைத்திருக்க வேண்டியதும் அவசியமாகிறது. இதில் மிக முக்கியமாக தண்ணீரில் விழுந்த போனை எப்படி சரி செய்வது என்று பார்ப்போம்.

சிலர் போன் தண்ணீரில் விழுந்த உடன் அவசர அவசரமாக ரெண்டு உதறு உதறி விட்டு உடனே ஆன் செய்து விடுவார்கள்.இதை மட்டும் நீங்கள் செய்யவே கூடாது.

உங்கள் போனில் இருந்து பாட்டரி, சிம்கார்ட் ,மெமரி கார்டு ஆகியவற்றை முதலில் கழட்டி விடவும். பின்னர் துணி அல்லது டிஸ்யூ பேப்பர் கொண்டு வெளி பாகங்களை துடைக்கவும்.

மொபைல் போனின் கதிர் வீச்சு முட்டையையும் அவிக்க கூடியது.

முட்டையை அவிக்கும் அளவிற்கு மொபைல் போனில் கதிர் வீச்சு வீரியமாக இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மொபைல் மூலம் முட்டைகளை அவித்துக் காட்டி இரண்டு ரஷ்ய பத்திரிகையாளர்கள் சாதனை புரிந்துள்ளனர். இன்றைய நவீன காலத்தில் மொபைல் போன்கள் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. ஆனால் அதே நேரத்தில் அவை எந்த அளவு ஆபத்தான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதையும் நாம் மறந்து விடுவதற்கில்லை. மொபைல் போன்களிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சு எந்த அளவுக்கு வீரியமானவை என்பதை இரண்டு ரஷ்ய பத்திரிகையாளர்கள் சோதனை மூலம் செய்து காட்டியுள்ளனர். மொபைல் போன்களிலிருந்து வெளி வரும் கதிர்வீச்சு, முட்டைகளையே வேக வைக்க கூடியது என்பதை அவர்கள் நிரூபித்துள்ளனர்.

Whats App மற்றும் Viber போன்றவற்றை இலவசமாக உங்கள் கணணியில் பயன்படுத்துவது எப்படி?

இனி உங்கள் viber மற்றும் whatsapp   போன்ற ஆண்டிராய்டு அப்ளிகேஷன்களை பயன்படுத்த விலை கொடுத்து ஸ்மார்ட் போன் வாங்கவேண்டிய தேவையில்லை.  உங்கள் வீட்டில் இருக்கும் கணினியைக் கொண்டே ஆண்டிராய்டு அப்ளிகேஷன் அனைத்தையும் பயன்படுத்தமுடியும்.
இந்த சேவையை அமெரிக்காவை சேர்ந்த ப்ளுஸ்டாக்ஸ் (bluestacks)  எனும் நிறுவனம் துவங்கியுள்ளது.  இதற்கு எந்த கட்டணமும் பெறப்படுவதில்லை என்பதுதான் இதன் தனிச் சிறப்பு.

கையடக்கத்தொலைபேசியின் பரிமாணங்கள்.

நவீன காலத்தில் தகவல் தொழிநுட்பம் எவ்வாறு முன்னேறி வந்தாலும் அதில் மொபைல் போனின் பரிமாணங்கள் அனைத்து வகைகளிலும் மிக வேகமாக வளர்ந்து வருகின்றன. ஒருவருக்கொருவர் வயர்லெஸ் இணைப்பில் பேசுவதற்கு மட்டும் எனத் தொடங்கிய இந்த சாதனம் இன்று கையடக்கக் கம்ப்யூட்டராக மாறி, நம்முடைய அன்றாட பல வேலைகளை மேற்கொள்ள உதவியாய் உள்ளது.

இன்றைய காலக்கட்டத்தில் மொபைல் போன் உபயோகிக்காதவர்களே இல்லை என சொல்லும் அளவிற்கு இது வளர்ச்சியடைந்து உள்ளது. இது தொடங்கிய நாள் தொட்டு, வளர்ந்த நிலைகளை ஆராய்வோமானால்,

உங்கள் கையடக்கத்தொலைபேசி ஒரிஜினலா என தெரிந்து கொள்ளுங்கள்.

தொலைக்காட்சி,வானொலி  எந்த ஒரு தகவல் தொழில்நுட்ப சாதனமும் செல்போனை போல் விற்பனையில் சாதனை படைத்திருக்காது என்பதை மறுப்பதற்கில்லை. பொருட்களுக்கு விற்பனையும் மவுசும்  கூடும்போது போலிகள் சந்தையை ஆட்டத் துவங்கி விடுகின்றன. செல்போன் சந்தையிலும் எது உண்மை எனது போலி என்று அறிய இயலாத அளவுக்கு தத்துரூபமாக போலிகள் கொட்டிக்கிடக்கின்றன.

நாம் வாங்கிய செல்போன் ஒரிஜினலா என்பதை செல்போனில் உள்ள IMEI எண் மூலம் அறிந்துகொள்ள முடியும்.உமது செல்போனில் *#06# என டைப் செய்தால் திரையில் செல்போனின் IMEI எண் காணக்கிடைக்கும். அந்த IMEI எண்ணை குறித்துக்கொண்டு