மொபைலின் ஆபத்துக்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மொபைலின் ஆபத்துக்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மொபைல் போனின் கதிர் வீச்சு முட்டையையும் அவிக்க கூடியது.

முட்டையை அவிக்கும் அளவிற்கு மொபைல் போனில் கதிர் வீச்சு வீரியமாக இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மொபைல் மூலம் முட்டைகளை அவித்துக் காட்டி இரண்டு ரஷ்ய பத்திரிகையாளர்கள் சாதனை புரிந்துள்ளனர். இன்றைய நவீன காலத்தில் மொபைல் போன்கள் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. ஆனால் அதே நேரத்தில் அவை எந்த அளவு ஆபத்தான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதையும் நாம் மறந்து விடுவதற்கில்லை. மொபைல் போன்களிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சு எந்த அளவுக்கு வீரியமானவை என்பதை இரண்டு ரஷ்ய பத்திரிகையாளர்கள் சோதனை மூலம் செய்து காட்டியுள்ளனர். மொபைல் போன்களிலிருந்து வெளி வரும் கதிர்வீச்சு, முட்டைகளையே வேக வைக்க கூடியது என்பதை அவர்கள் நிரூபித்துள்ளனர்.