உங்கள் கையடக்கத்தொலைபேசி ஒரிஜினலா என தெரிந்து கொள்ளுங்கள்.

தொலைக்காட்சி,வானொலி  எந்த ஒரு தகவல் தொழில்நுட்ப சாதனமும் செல்போனை போல் விற்பனையில் சாதனை படைத்திருக்காது என்பதை மறுப்பதற்கில்லை. பொருட்களுக்கு விற்பனையும் மவுசும்  கூடும்போது போலிகள் சந்தையை ஆட்டத் துவங்கி விடுகின்றன. செல்போன் சந்தையிலும் எது உண்மை எனது போலி என்று அறிய இயலாத அளவுக்கு தத்துரூபமாக போலிகள் கொட்டிக்கிடக்கின்றன.

நாம் வாங்கிய செல்போன் ஒரிஜினலா என்பதை செல்போனில் உள்ள IMEI எண் மூலம் அறிந்துகொள்ள முடியும்.உமது செல்போனில் *#06# என டைப் செய்தால் திரையில் செல்போனின் IMEI எண் காணக்கிடைக்கும். அந்த IMEI எண்ணை குறித்துக்கொண்டு
http://www.numberingplans.com/?page=analysis&sub=imeinr என்ற இணைய இணைப்பில் தகுந்த இடத்தில IMEI எண்ணை தந்து செல்போனின் மாடல் மற்றும் தயாரிப்பாளர் போன்ற தகவல்கள் மூலம் செல்போன் ஒரிஜினலா என்பதை அறிந்துகொள்ளலாம்.

(செய்தியின் உண்மைத்தன்மையை பரிசோதித்தபின் இப்பதிவு வெளியிடப்படுகிறது)