தண்ணீர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தண்ணீர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மொபைல் போன் தண்ணீரில் விழுந்தால் சரி செய்யும் முறை.

மொபைல் போன்கள் நமக்கு மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்ட இந்த் காலத்தில் அவற்றை பாதுகாப்பாய் வைத்திருக்க வேண்டியதும் அவசியமாகிறது. இதில் மிக முக்கியமாக தண்ணீரில் விழுந்த போனை எப்படி சரி செய்வது என்று பார்ப்போம்.

சிலர் போன் தண்ணீரில் விழுந்த உடன் அவசர அவசரமாக ரெண்டு உதறு உதறி விட்டு உடனே ஆன் செய்து விடுவார்கள்.இதை மட்டும் நீங்கள் செய்யவே கூடாது.

உங்கள் போனில் இருந்து பாட்டரி, சிம்கார்ட் ,மெமரி கார்டு ஆகியவற்றை முதலில் கழட்டி விடவும். பின்னர் துணி அல்லது டிஸ்யூ பேப்பர் கொண்டு வெளி பாகங்களை துடைக்கவும்.

மினரல் வாட்டரின் ஆபத்துக்கள்.

பணம் கொடுத்து குடி தண்ணீரைப் வாங்க வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்படும் என்பதை நாம் கனவில் கூட நினைத்து பார்த்திருக்க மாட்டோம்.
அந்த காலங்களில் ஊர் தோறும் நீர் தேக்கங்கள், நல்ல தண்ணீர் கிணறுகள் இப்படியாக சுத்தமான குடி நீரை மக்கள் அருந்தி வந்தனர். இன்றோ, வீடுகள் தோறும் பாக்கெட் வாட்டர், மினரல் வாட்டர் கேன்கள், பாட்டால் வாட்டர், என்று தண்ணீரை காசு கொடுத்து வாங்கி குடிக்க வேண்டிய அவல நிலை.

தண்ணீர் மனிதர்களின் அடிப்படை ‘உரிமை’ இதை பணம் கொடுத்தால் மட்டும் கிடைக்கும் என்ற நிலையில் உலகம் முழுவதும் தண்ணீர் இன்று ஒரு தலை சிறந்த பிசினெஸ்.

வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதன் நன்மைகள்.

"காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது நல்லது" என்று கேள்விப்பட்டிருப்போம்.இப்படி தண்ணீர் குடிப்பது புற்றுநோய்,பி.பி., சுகர், காசநோய் என்று பலவற்றுக்கும் தீர்வு தருகிறது என்றால் ஆச்சரியமான விஷயம் தானே..!

இது ஜப்பான் மற்றும் சீனாவில் பிரபலமாக இருக்கிறதாம். அங்கே அறிவியல் பூர்வமாகவும் இந்த தண்ணீர் வைத்தியம் நிரூபிக்கப்பட்டிருக்கிறதாம். காலையில் பல் துலக்கும் முன் 160 மிலி அளவு டம்ளரில் நான்கு டம்ளர்கள் தண்ணீர் குடிக்க வேண்டும்.

வெந்நீரின் நன்மைகள்.

பொதுவாக நகரங்களில் உள்ளவர்கள் குளிர்ந்த நீரை (ஐஸ் வாட்டர்) அருந்துவதை ஒரு பேஷனாக வைத்திருக்கிறார்கள். ஆனால் வெந்நீர் அருந்துவதன் மூலம் பல நோய்களில் இருந்து பாதுகாக்கப்படுவதுடன் இன்னும் பல நன்மைகளும் உள்ளன.அவற்றில் சிலவற்றை ஆராய்வோமானால்,

* வெந்நீர் குடித்தால் நெஞ்செரிவு மறையும்.

* அடிக்கடி வெந்நீர் குடிப்பவர்களுக்கு  உடலில் கொழுப்பு  சேராமல்  கரையும். அஜீரணத்தால் ஏற்படும் தலைவலி வரவே  வராது

* தடுமலின் போது வெந்நீர் பருகுவதால் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பலாம்.

தண்ணீர் பருகுவதின் பயன்கள்.

காலையில் எழுந்தவுடன் பல் துலக் குவதற்கு முன்பாகவே 1.26 லிட்டர் தண்ணீரை ஒரே தடவையில் குடித்துவிட வேண்டும். 1.26 லிட்டர் அளவுள்ள குவளையை வைத்துக் கொள்வது சாலச் சிறந்தது. தண்ணீரைக் குடித்த பிறகு ஒரு மணி நேரம் காப்பி, தேநீர் வேறு எவ்வித பானங்களையோ சாப்பிடக் கூடாது
காலையில் தண்ணீர் குடிப்பதற்குத் தயாராகும் வகையில் முதல் நாள் இரவு, சாப்பிட்டு முடித்த பிறகு படுக்கைக்குச் செல்லும் முன்பு நரம்பு மண்டலத்தை தூண் டிவிடக் கூடிய பானங்களையோ தின்பண்டங்களையோ சாப்பிடக் கூடாது. இந்த நிபந்தனை மிகவும் முக்கியமானது