காற்சட்டை பைகளில் கைத்தொலைபேசியை வைத்தால் ஆண்களின் ஆண்மை பாதிக்கப்படலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். காற்சட்டை பைகளில் கைத்தொலைபேசியை வைத்தால், ஆண்களுடைய விந்தணு பாதிப்பு ஏற்பட்டு தந்தையாகும் வாய்ப்பு பாதிக்கப்படலாம் என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளது. இன்றைய நவநாகரீக காலத்தில் கைத்தொலைபேசி பயன்படுத்தாத நபரே இல்லை என்று கூறுமளவுக்கு அனைத்து தரப்பினரும் இதை ஒரு ஆறாம் விரல் போன்று பயன்படுத்துகின்றனர்.செல்போன்கள் வெறும் பேசுவதற்கு மட்டும் பயன்படுத்தப்பட்ட காலம் சென்று தற்போது அது அனைத்து பொழுது போக்கு அம்சங்களும் உடையதாக மாற்றமடைந்துள்ளது. இதனால் செல்போன்களில் தான் இன்றைய இளம் தலைமுறையினர் தங்களது பெரும்பாலான நேரங்களை செலவிடுகின்றனர்.


