
செல்போன்கள் வெறும் பேசுவதற்கு மட்டும் பயன்படுத்தப்பட்ட காலம் சென்று தற்போது அது அனைத்து பொழுது போக்கு அம்சங்களும் உடையதாக மாற்றமடைந்துள்ளது. இதனால் செல்போன்களில் தான் இன்றைய இளம் தலைமுறையினர் தங்களது பெரும்பாலான நேரங்களை செலவிடுகின்றனர்.
இந்த நிலையில், எக்ஸிடர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் நடத்திய ஆய்வில், ஒருவர் தனது காற்சட்டை பையில் வைக்கும் கைத்தொலைபேசியில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு அவரது விந்தணுக்களைப் பாதிப்பதால் அவர் தந்தையாகும் வாய்ப்பு குறைவதாக தெரிவித்துள்ளனர். எக்ஸிடர் பல்கலைகழகத்தின் பேராசிரியர் டாக்டர்.பியோனா மேத்யூஸ் தலைமையிலான குழு, 1492 ஆண்களிடம் மேற்கொள்ளப்பட்ட 10 ஆய்வுகளை அடிப்படையாக வைத்தே விஞ்ஞானிகள் மேற்கண்ட எச்சரிக்கையை விடுத்துள்ளனர். எனினும் இது தொடர்பான உறுதியான முடிவை தெரிவிக்க முழுமையான ஆய்வை முன்னெடுக்க வேண்டியுள்ளதாக ஆய்வாளர்கள் மேலும் தெரிவிக்கின்றனர். மொத்தத்தில், கைத்தொலைபேசி கூடுமான அளவு உபயோகிக்காமல் இருப்பதே நல்லது.