ராபின் வில்லியம்ஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ராபின் வில்லியம்ஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஆண்களின் கண்ணீருக்கு கண்ணியம் தேடி தந்தவர் ராபின் வில்லியம்ஸ்! கமல் இரங்கல்

பிரபல ஹாலிவுட் நடிகர் ராபின் வில்லியம்ஸின் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது, பொதுவாக நகைச்சுவை நடிகர்கள் தான் இந்த சமூகத்தின் மிக சிறந்த விமர்சகர்கள், தங்களது கோபத்தை கூட நகைச்சுவையாக வெளிப்படுத்த கூடியவர்கள்.

கோபத்தை தொடர்ந்து அடக்குவதால் தான் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். மிக எளிதில் அழுது விடும் இயல்பு கொண்டவர் ராபின் வில்லியம்ஸ். இதை அவரது படங்களில் காணலாம்.

பிரபல ஹாலிவுட் நடிகர் ராபின் வில்லியம்ஸ் மரணம்!

ஹாலிவுட்டின் பிரபல நடிகர் ராபின் வில்லியம்ஸ் காலமானார், அவருக்கு வயது 63, வீட்டில் சுயநினைவின்றி இருந்த அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. டி.வி. நிகழ்ச்சிகளில் நடித்து பிரபலமானவர் ராபின் வில்லியம்ஸ்.

அமெரிக்காவை சேர்ந்தவரான இவர் கேன் ஐ டூ இட் டில் ஐ நீடு கிளாசஸ் என்ற படத்தின் மூலம் சினிமாவில் நடிக்க தொடங்கினார். தொடர்ந்து வேர்ல்டு ஆகார்டிங் டூ கார்ப், குட் மார்னிங், வியட்நாம், டெட் போயட் சொசைட்டி, அவேக்னிங்ஸ், தி பிஸர் கிங், ஹூக், மிசர்ஸ் டவுட்பயர், ஜூமாஞ்சி, நைட் அட் தி மியூசியம், ஹேப்பி பீட் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்து பிரபலமானார்.