ஹாலிவுட்டின் பிரபல நடிகர் ராபின் வில்லியம்ஸ் காலமானார், அவருக்கு வயது 63, வீட்டில் சுயநினைவின்றி இருந்த அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. டி.வி. நிகழ்ச்சிகளில் நடித்து பிரபலமானவர் ராபின் வில்லியம்ஸ்.
அமெரிக்காவை சேர்ந்தவரான இவர் கேன் ஐ டூ இட் டில் ஐ நீடு கிளாசஸ் என்ற படத்தின் மூலம் சினிமாவில் நடிக்க தொடங்கினார். தொடர்ந்து வேர்ல்டு ஆகார்டிங் டூ கார்ப், குட் மார்னிங், வியட்நாம், டெட் போயட் சொசைட்டி, அவேக்னிங்ஸ், தி பிஸர் கிங், ஹூக், மிசர்ஸ் டவுட்பயர், ஜூமாஞ்சி, நைட் அட் தி மியூசியம், ஹேப்பி பீட் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்து பிரபலமானார்.
நடிகராக மட்டுமல்லாது, டப்பிங் ஆர்டிஸ்ட் மற்றம் சிறந்த ஸ்டாண்ட் அப் காமெடியனாகவும் தகிழ்ந்தவர் ராபின் வில்லியம்ஸ். அமெரிக்காவின் கலிபோர்னியாவின் மேரியன் கன்ட்ரியில் வசித்து வந்த ராபின், நேற்று (ஆகஸ்ட் 11ம் தேதி) தனது வீட்டில் சுயநினைவின்றி காணப்பட்டார். இதனையடுத்து அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இறப்பதற்கு முன் ராபின் அதிக மனஉளைச்சலில் இருந்ததாகவும், அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
சிறந்த நடிகருக்காக மூன்று முறை ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர், குட் வில் ஹன்டிங் என்ற படத்திற்காக சிறந்த குணச்சித்திர நடிகருக்கான ஆஸ்கர் விருது பெற்றுள்ளார். இவைதவிர எமி விருதுகள், கோல்டன் குளோப் உள்ளிட்ட ஏராளமான சர்வதேச விருதுகளை பெற்றுள்ளார்.
ராபின் வில்லியம்ஸின் மறைவையொட்டி ஏராளமான ஹாலிவுட் பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.

Cinema, hollywood actor, Robin williams,Notable figures react to Robin Williams's death