பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா படத்தில் நடிக்கும் ஒவ்வொரு நாயகிகளும் பரபரப்பை ஏற்படுத்தாமல் விடுவதில்லை. அவருடைய படங்களில் ஹீரோயின்களுக்கு எப்போதுமே தனி மதிப்பும், முக்கியத்துவமும் உண்டு.
ஹீரோக்களுக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறாரோ அதே அளவிற்கு ஹீரோயின்களுக்கும் முக்கியத்துவம் கொடுப்பார். சமீபத்தில் அவரது இயக்கத்தில் வெளிவந்த 'ஐஸ் க்ரீம்' படத்தின் நாயகி தேஜஸ்வி கூட நிர்வாண காட்சியில் நடித்திருப்பதாக ஒரு பரபரப்பு எழுந்தது. அதன் பின் படம் வெளிவந்த பின்தான் அப்படி எதுவும் காட்சிகள் இல்லை என்று தெரிந்து ரசிகர்கள் ஏமாற்றமடைந்து, படத்தைத் தோல்வி அடையவும் வைத்தனர்.
அடுத்ததாக 'ஐஸ் க்ரீம்' படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளாராம் ராம்கோபால் வர்மா. இந்தப் படத்தில் நவீனா என்ற நடிகை நாயகியாக நடிக்க உள்ளாராம். அது மட்டுமல்ல எப்படிப்பட்ட காட்சியாக இருந்தாலும் நடிக்க அவர் தயாராக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. படத்துக்குப் படம் விதவிதமான ஹீரோயின்களை ராம்கோபால் வர்மா எங்கிருந்துதான் கண்டுபிடிக்கிறாரோ என டோலிவுட் வட்டாரங்கள் ஆச்சரியப்படுகின்றன. 'ஐஸ் க்ரீம்' முதல் பாகத்தில் நடித்த தேஜஸ்வியை விட இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ள இந்த நவீனா ரொம்பவும் 'ஹாட்' ஆக இருக்கிறார் என்கிறார்கள்.
ராம்கோபால் வர்மா தற்போது இயக்கியுள்ள 'அனுக்ஷனம்' விரைவில் வெளிவர உள்ளது. இந்தப் படத்தில் மதுஷாலினியும், தேஜஸ்வியும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Cinema, thejeshvi, Ram Gopal Varmas next heroine introduced