கொய்யா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கொய்யா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சுவைமிக்க கொய்யா பர்ஃபி

கொய்யா பர்ஃபி தேவையானவை: நடுத்தர சைஸ் கொய்யாப்பழம் & 5, சர்க்கரை & மூன்றரை கப், வெண்ணெய் & கால் கப், சிட்ரிக் ஆசிட் & 1 கிராம், உப்பு & அரை டீஸ்பூன், ஏலக்காய் (பொடித்தது) & 5. செய்முறை: பழத்தை நறுக்கி ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்து அடுப்பிலேற்றி வேகவிடவும். அதை மசித்து கொசுவலைத் துணியில் ஊற்றி விதைகள், தோல் போன்றவற்றை அகற்றி விடவும். வடிகட்டிய சாறை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதோடு சர்க்கரை, வெண்ணெய், சிட்ரிக் ஆசிட் மற்றும் உப்பையும் சேர்த்து அடுப்பிலேற்றி கிளறவும். கெட்டிப்படத் துவங்கியதும் ஏலப் பொடியைத் தூவி கிளறவும்.

சுவையான கொய்யா ஊறுகாய்.

தேவையான பொருட்கள்.
கொய்யாக்காய் துண்டங்கள் -1கப், வெந்தயம் - 1 தேக்கரண்டி, மிளகாய் வற்றல் பொடி - 1 தேக்கரண்டி, உப்பு - தேவைக்கேற்ப, நல்லெண்ணெய் - அரை கப், கடுகு - அரை தேக்கரண்டி

செய்முறை.
செங்காயாக இருக்கும் கொய்யாக்காயின் (பழம் கண்டிப்பாக கூடாது) நடுப்பகுதியில் இருக்கும் விதைகளை நீக்கவும். மீதி சதைப்பகுதியை சிறு துண்டங்களாக்கவும்.மிளகாய் வற்றலை வறுத்து பொடிக்கவும்.வெந்தயத்தை சிவக்க வறுத்து பொடிக்கவும்.

கொய்யாப்பழம் மருத்துவ குணமுடையதா?

100 கிராம் கொய்யாப் பழத்தில் நார்ப்பொருள் 5.40 கிராம், கொழுப்பு 0.30 கிராம், புரதம் 1 கிராம், மாவுப்பொருள் 11.6 கிராம், கால்சியம் 10 மில்லிகிராம், பான் பிரஸ் 28 மி.கி. இரும்புச் சத்து 104 ;மி வைட்டமின் ‘‘சி’’ 232 மி.கி. என்ற அளவிலும், வைட்டமின் ‘‘ஏ’’, வைட்டமின் ‘‘பி’’ சத்துக்களும், பெக்டினும் கணிசமாக உள்ளன.
வைட்டமின் ‘சி’ சத்து ஆரஞ்சு பழத்தைவிட கொய்யாப் பழத்தில் ஏழு மடங்கு உள்ளது. எலுமிச்சம் பழத்தைவிட மூன்றரை மடங்கும் அதிகமாக உள்ளது. இதனால் கொய்யாப்பழத்தை வைட்டமின் ‘‘சி’’ சுரங்கம், என்றும் கூறுவர்.

சக்தி நிறைந்த கொய்யாப்பழம்

கொய்­யாக்­க­னியின் சுவையை அறி­யா­த­வர்கள் யாரும் இருக்க முடி­யாது. கொய்யா முக்­க­னி­யான மா, பலா, வாழை இவற்­றிற்கு இணை­யாக வர்­ணிக்­கப்­படும் பழ­மாகும். மிகக் குறைந்த விலையில் அதிக சத்­துக்­களைத் தன்­ன­கத்தே கொண்ட பழம் இது.

கொய்­யாவில் பல­வ­கைகள் உள்­ளன. தற்­போது விற்­ப­னைக்கு வரும் பழங்­களில் உள் சதைப்­ப­குதி வெள்ளை மற்றும் சிவப்பு நிறங்­களில் உள்­ளன. ஒரு சில வகை கொய்­யாவின் சதைப்­ப­குதி ரோஸ் நிறத்தில் காணப்­படும்.