சிங்கம் படத்திற்கு பிறகு தான் தயாரித்த கெளரவம் என்ற படத்தில் ஒரு முதிர்ச்சியான வேடத்தில் நடித்த பிரகாஷ்ராஜ், உன் சமையல் அறையில் என்ற படத்தை தயாரித்து, இயக்கி நாயகனாகவும் நடித்திருந்தார். ஆனால் அந்த இரண்டு படங்களுமே ஓடவில்லை. அதனால் சொந்த படம் எடுத்து தொடர்ந்து கையை சுட்டுக்கொள்ள வேண்டாமென்று அந்த விஷப்பரீட்சையில் இறங்குவதை நிறுத்தி விட்டவர், தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என நான்கு மொழிகளிலும பரவலாக நடித்துக் கொண்டிருக்கிறார்.இதில் மற்ற மொழிகளில் வில்லனாக நடித்துக் கொண்டிருக்கும் பிரகாஷ்ராஜை தமிழில்தான் யாரும் வில்லன் வேடத்தில் நடிக்க அணுகவில்லை. மாறாக, கேரக்டர் ஆர்ட்டிஸ்டாக யூஸ் பண்ணத் தொடங்கியிருக்கிறார்கள். குறிப்பாக, மணிரத்னம் இயக்கத்தில் துல்கர்சல்மான்-நித்யாமேனன் நடித்து வரும் ஓகே கண்மனி படத்தில் பிரகாஷ்ராஜ்க்கு உருக்கமான வேடமாம்.
சிங்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிங்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சூர்யாவின் ’சிங்கம் 3’ வருமா?
இயக்குநர் ஹரி - சூர்யா கூட்டணியில் இதுவரை வவந்த அனைத்துப் படங்களும் பெரிய வெற்றிப் பெற்றுள்ளன. அதிலும் சிங்கம் மற்றும் சிங்கம் 2 ஆகிய இரண்டுப் படங்களும் பெரும் வசூல் ஈட்டியது. தற்போது இந்த கூட்டணி ஐந்தாவது முறையாக இணைகிறார்கள்.
சமீபத்தில் நடைபெற்ற அஞ்சான் சக்ஸஸ் பார்ட்டியில் பேசிய சூர்யா, அடுத்த ஆண்டு மீண்டும் இயக்குநர் ஹரியுடன் இணைந்து பணியாற்ற உள்ளேன். அப்படம் சிங்கம் 3 ஆக இருக்குமா என்பதை இப்போது கூற முடியாது, என்று தெரிவித்தார்.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)