காலை உணவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காலை உணவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

முழு நாளும் சுறுசுறுப்புடன் செயற்பட வேண்டுமா?

தொடங்கும் நாள் சிறந்ததாக இருக்க வேண்டுமெனில், அதற்கு காலையில் நல்ல ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும் என்று சொல்வார்கள். ஏனெனில் காலையில் நல்ல ஆரோக்கியமான மற்றும் உடலுக்கு தேவையான ஆற்றல் அதிகம் நிறைந்த உணவுகளை சாப்பிட்டால், உடலின் சக்தி சீராக இருந்து, உடல் நன்கு சுறுசுறுப்புடன் செயல்படும்.

முக்கியமாக காலையில் எழுந்ததும் உடலானது ஊட்டச்சத்துக்களை நாடும். ஆகவே புரோட்டீன் மற்றும் நார்ச்சத்துடன் கூடிய கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகள் சிறந்ததாக இருக்கும்.ஏனெனில் இத்தகைய உணவுகளை காலையில் சாப்பிட்டால், நாள் முழுவதும் சக்தியானது நிறைந்திருப்பதோடு, உடல் சோர்வடையாமலும் இருக்கும்.

பாண்(பிரட்) சாப்பிடுவதில் உள்ள தீமைகள்.

பிரட்டில் அதிகளவில் சோடியம் இருப்பதால், இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்கள் வர வாய்ப்புண்டு. அதிலும் பிரட்டை தினசரி காலை உணவாக சாப்பிடும் ஒருவரது உடலில் உப்பின் அளவு அதிகரிப்பதற்கான வாய்ப்பு அதிகம். குறிப்பாக பிரட்டை கொண்டு சாண்ட்விச், பர்கர் அல்லது ஹாட் டாக் போன்றவைகளை செய்து சாப்பிடுவதன் மூலம், பல்வேறுபட்ட இதய நோய்கள் வரும் ஆபத்து அதிகரிக்கும்.

பிரட்டை எந்த வகையில் தயார் செய்து சாப்பிட்டாலும், உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைக்காது.அதுமட்டுமின்றி வாய்க்கு சுவையாக வயிறு நிறைய சாப்பிடும் போது, உடலுக்குத் தேவையான புரதங்கள், வைட்டமின்கள் நிறைந்த உணவு வகைகளை அதிகமாக சேர்க்கின்றோமா?

காலை உணவு உண்ணாத சிறுவர்களுக்கு நீரழிவு நோய் வரும்.

காலை உணவை சாப்பிடாத குழந்தைகளுக்கு நீரழிவு நோய் வரும் அபாயம் அதிகரிப்பதாக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். இங்கிலாந்தில் உள்ள சிறுவர் பள்ளிகளில் 10 வயதுக்கு உள்ளிட்ட குழந்தைகளை ஆய்வு செய்ததில் காலை உணவை தவிர்க்கும் குழந்தைகளுக்கு இன்சுலின் சுரப்பின் அளவு மிக குறைந்து இருக்கிறது. இதன் காரணமாக இரண்டாம் வகை நீரழிவு வருகிறதாம்.

குழந்தைகளை அதிகம் தாக்குவது முதல் வகை நீரிழிவு நோய். ஆனால், காலை உணவை தவற விடுவதன் மூலம் இரண்டாம் வகை நீரிழிவு வருகிறது. சிறுவயதிலேயே இந்நோய் வருவதை தடுக்க காலையில் அவசியம் உணவு எடுத்துக் கொள்ளவேண்டும் என இங்கிலாந்தின் நலவாழ்வியல் ஆராய்ச்சி மையம் வலியுறுத்துகிறது.

"காலை உணவு சாப்பிடாவிட்டால் திடீர் மாரடைப்பு ஏற்படலாம்" – விஞ்ஞானிகள் எச்சரிக்கை !!

மனிதர்கள் உணவு பழக்கத்தால் ஏற்படும் நன்மை,தீமை பற்றி சமீபத்தில் ஒரு கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. அப்போது உலகம் முழுவதும் பெரும்பாலானவர்கள் காலை உணவு சாப்பிடுவதில்லை என்று தெரிய வந்தது.
அதிக நேரம் உழைப்பவர்கள், மது அருந்துபவர்கள், புகை பிடிப்பவர்கள், திருமணம் ஆகாதவர்கள், போதிய உடற்பயிற்சி செய்யாதவர்கள்தான் காலை உணவை சாப்பிடாமல் உள்ளனர் என்றும் தெரிந்தது.

காலை உணவின் முக்கியத்துவம்.

காலை நேரத்தில் உணவை தவிர்ப்பது ஆரோக்கிய கேட்டிற்கு வழிவகுக்கும் என்று உணவியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தைகளுக்கு காலை உணவில் கார்போஹைட்ரேட் சத்து நிறைந்த உணவுகளை அளிப்பது அவர்கள் நாள்முழுவதும் புத்துணர்ச்சியுடனும் செயல்பட, தேவையான சக்தியை அளிக்கிறது என்றும் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

அவசர உலகத்தில் பெரும்பாலானவர்களுக்கு, காலை உணவை சாப்பிடக்கூட நேரமின்மையால் அதனை தவிர்த்து விடுகின்றனர்.