மாரடைப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மாரடைப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கோபப்படுபவர்களின் உயிருக்கு ஆபத்து அதிகம்.

உடல் நலம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமெனில், அதற்கு நிறைய செயல்களை கடைபிடிப்பதோடு, ஒருசிலவற்றையும் அடக்கி வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். ஒருவர் எதை அடக்க தெரிகிறானோ, இல்லையோ, கோபத்தை அடக்க தெரிந்திருக்க வேண்டும். ஏனெனில் கோபத்தால், ஒருவரது நட்பு எப்படி முறிய வாய்ப்புள்ளதோ, அதேப்போல் உடலில் உள்ள உயிரும் சில சமயங்களில் முறிய வாய்ப்புள்ளது.

கோபம் என்பது எந்த நேரத்திலும் வரும். ஆனால் அந்த கோபம் அளவுக்கு அதிகமானால், அவை உடலில் பல பாதிப்புக்களை ஏற்படுத்தும்.உதாரணமாக, மன அழுத்தம், இதய நோய், இரத்த அழுத்தம், தலைவலி, போதிய தூக்கம் இல்லாமை போன்றவை. இத்தகைய பிரச்சனைகள் உடலில் வந்தால், பின் உடல் நிலையானது மிகவும் மோசமாகி, பின் இறப்பை சந்திக்க நேரிடும்.

பெண்களுக்கு ஏற்படும் மாரடைப்பிற்கான அறிகுறிகள்.

பெண்களுக்கு மாரடைப்பு நோய் அறிகுறிகள் பற்றி தகவல் !!

ஆண்களைப்போலவே பெண்களுக்கும் மாரடைப்பு நோய் ஏற்படும், ஆனால் அதற்கான அறிகுறிகள் ஆண்களைவிட பெண்களுக்கு வித்தியாசமானதாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். எனவே மாரடைப்பு குறித்த அறிகுறிகளை பெண்கள் தெரிந்து கொள்வதன் மூலம் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்றும் ஆய்வாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

பெண்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கும்போது இருதய நோய்கள் வருகிற வாய்ப்பும், மூளைவாதம் ஏற்படுகிற வாய்ப்பும் அதிகரிக்கிறது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

"கை தட்டினால் நோய் நீங்கும்" ஆராய்ச்சி முடிவு.

பொது நிகழ்ச்சிகளில் ஒருவரை பாராட்ட கை தட்டுகிறோம். இப்படி கைதட்டி ரசித்து சிரிப்பதன் மூலம், எந்த நோயும் நம்மை அண்டாமல் விரட்டலாம். இந்தியாவில், ஒரு மணி நேரத்தில் 90 பேர் மாரடைப்பு வந்து மரணமடைகின்றனர். இதய நோய் பாதிப்புக்கு ஆளாவதில், உலகத்திலேயே இந்தியர்களுக்குத் தான் முதலிடம். இந்தியர்களுக்கு நோய் வர உடலியல் காரணங்களை விட உளவியல் காரணங்களே அதிகம். எதற்கும் உணர்ச்சி வசப்படாமல், அனைத்தையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் மனநிலை வந்தாலே, நம்மை எந்த நோயும் அணுகாது.

வெற்றிதான் மகிழ்ச்சியின் திறவுகோல் என்பதை விட, மகிழ்ச்சியாக இருப்பதே வெற்றிதான் என்று எண்ண வேண்டும்.

"காலை உணவு சாப்பிடாவிட்டால் திடீர் மாரடைப்பு ஏற்படலாம்" – விஞ்ஞானிகள் எச்சரிக்கை !!

மனிதர்கள் உணவு பழக்கத்தால் ஏற்படும் நன்மை,தீமை பற்றி சமீபத்தில் ஒரு கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. அப்போது உலகம் முழுவதும் பெரும்பாலானவர்கள் காலை உணவு சாப்பிடுவதில்லை என்று தெரிய வந்தது.
அதிக நேரம் உழைப்பவர்கள், மது அருந்துபவர்கள், புகை பிடிப்பவர்கள், திருமணம் ஆகாதவர்கள், போதிய உடற்பயிற்சி செய்யாதவர்கள்தான் காலை உணவை சாப்பிடாமல் உள்ளனர் என்றும் தெரிந்தது.

வெந்தய கீரை மாரடைப்பை தடுக்கும் குணமுடையது.

வெந்தயக் கீரையைக் கொண்டு அல்வா தயாரித்துக் காலை, மாலை ஒரு உருண்டை அளவு சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணிந்து விடும். வெந்தயக் கீரையைப் பொடியாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு வதக்கி, இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு, ஒரு டம்ளர் அளவிற்குச் சுண்டக்காய்ச்சி, காலை, மாலை அரை டம்ளர் வீதம் கொடுத்து வந்தால் நெஞ்சுவலி பூரணமாகக் குணமாகும். உடலை வளர்க்கும் புதிய இரத்தத்தை உற்பத்தி செய்யும். உடலுக்கு நல்ல பலம் தரும்.

வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் நீங்களே உங்களை எப்படி காப்பாற்றிக்கொள்வது....?

வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில பிரச்சனைகள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது, நீங்கள் மிகவும் படபடப்பாகவும், தொய்வாகவும் உள்ளீர்கள். திடீரென்று உங்கள் இதயத்தில் அதிக "வலி" ஏற்படுவதை உணர்கிறீர்கள், அந்த வலியானது மேல் கை முதல்தோள்பட்டை வரைபரவுவதை உணருகிறீர்கள். உங்கள் வீட்டில் இருந்து மருத்துவமனை அதிக தூரம் இருப்பதாக வைத்துக்கொள்வோம, ஆனால் உங்களால் அவ்வளவு  தூரத்தை கடக்க முடியாது என உங்கள் மூளை உங்களுக்கு சொல்கிறது.  இந்த நேரத்தில்