பழங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பழங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

முழு நாளும் சுறுசுறுப்புடன் செயற்பட வேண்டுமா?

தொடங்கும் நாள் சிறந்ததாக இருக்க வேண்டுமெனில், அதற்கு காலையில் நல்ல ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும் என்று சொல்வார்கள். ஏனெனில் காலையில் நல்ல ஆரோக்கியமான மற்றும் உடலுக்கு தேவையான ஆற்றல் அதிகம் நிறைந்த உணவுகளை சாப்பிட்டால், உடலின் சக்தி சீராக இருந்து, உடல் நன்கு சுறுசுறுப்புடன் செயல்படும்.

முக்கியமாக காலையில் எழுந்ததும் உடலானது ஊட்டச்சத்துக்களை நாடும். ஆகவே புரோட்டீன் மற்றும் நார்ச்சத்துடன் கூடிய கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகள் சிறந்ததாக இருக்கும்.ஏனெனில் இத்தகைய உணவுகளை காலையில் சாப்பிட்டால், நாள் முழுவதும் சக்தியானது நிறைந்திருப்பதோடு, உடல் சோர்வடையாமலும் இருக்கும்.

கோடையில் குளிர்ச்சி தரும் பழ ஜூஸ்.

கோடை காலம் வந்தாலும்தான் வந்தது, எல்லா இடங்களிலும் அக்னி நட்சத்திர தகிப்பு மக்களை பாடாய்படுத்துகிறது. அதில் இருந்து தப்பிக்க வேண்டுமா? அப்படியென்றால், தர்ப்பூசணி, ஆரஞ்சு, வெள்ளரிக்காய் சாப்பிடுங்கள். கோடையை கூல் ஆக்கிவிடலாம்.

தர்பூசணி : தாகத்தைத் தணிக்கும் தர்ப்பூசணிக்கு பசியை போக்கும் சக்தியும் உண்டு. வயிற்றுப் பொருமலைக் குறைக்கும். பித்தச் சூட்டை விரட்டும்.

நோய் எதிர்ப்புசக்தி மிகுந்த ஸ்டோபரி பழம்.

தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் போக வேண்டிய அவசியம் இருக்காது எனக் கூறுவது உண்டு. ஏனெனில் ஆப்பிளில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம்.ஆனால் இந்த விஷயத்தில் ஸ்ட்ராபெரி பழம் ஆப்பிளையே மிஞ்சும் என்பது புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின் சால்க் இன்ஸ்டிடியூட்டின செல்லுலர் நியூராலஜி ஆய்வகம்(சிஎப்எல்) எலிகளை வைத்து ஒரு ஆய்வை மேற்கொண்டது. ஒரு பிரிவு எலிகளுக்கு ஸ்ட்ராபெரி பழம் வழங்கப்பட்டது.

பழங்களின் ஆங்கில,தமிழ் பெயர்கள்.

APPLE - குமளிப்பழம்,அரத்திப்பழம்
APRICOT - சர்க்கரை பாதாமி
AVOCADO - வெண்ணைப் பழம்,ஆணை கொய்யா
BANANA - வாழைப்பழம்
BELL FRUIT - பஞ்சலிப்பழம்
BILBERRY - அவுரிநெல்லி
BLACK CURRANT - கருந்திராட்சை, கருங்கொடிமுந்திரி
BLACKBERRY - நாகப்பழம்
BLUEBERRY - அவுரிநெல்லி
BITTER WATERMELON - கெச்சி
BREADFRUIT - சீமைப்பலா, ஈரப்பலா

பலாப்பழம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.


பலாப்பழத்தில் விட்டமின் ஏ சத்து அதிகம் உள்ளது . உடலுக்கும், மூளைக்கும் வலுவளிக்கும் .நோய்களை குணமாக்கும் தன்மை கொண்டது .இரத்தத்தை விருத்தி ஆக்கும் தன்மையும் இந்த பழத்தில் உண்டு . எதுவும் அளவுடன் சாப்பிட வேண்டும் . அதுதான் உடம்புக்கு நல்லது பலாச்சுளைகள் பொட்டாசியம், கல்சியம் , பாஸ்பரஸ் ஆகிய உப்பு சத்துக்களும் உயிர்ச்சத்து ஏ மற்றும் சி யும் அதிக அளவில் கொண்டுள்ளன. பலாக் கொட்டைகள் உயிர்ச்சத்து பி1, பி2 ஆகியவை கொண்டுள்ளன.