இதய நோய்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இதய நோய்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

உங்கள் இதயம் நலமுள்ளதாக இருக்க வேண்டுமா?

செயல்திறன் குறைப்பாடு உடலுக்கு சரியாக வேலை செய்யாமல் சோம்பேறியாக இருந்தீர்கள் எனில், இப்படி இருக்கும் உங்கள் இதயம் செயல்திறன் குறைப்பாடு உள்ளதாகி விடும்.

புகைப்பது நீங்கள் தினம் தினம் புகைத்துக்கொண்டே இருப்பதனால், நன்றாய் இயங்கும் உங்கள் இதயம்  செயல்திறன் குறைந்ததாகி விடும்.உடற்பயிற்சி அனைவரும் தவறாது செய்ய வேண்டிய ஒன்று. உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது தான் பலருக்கு இதய கோளாறுகள் ஏற்பட காரணமாக இருக்கிறது.எனவே உங்களது இதயம் நன்கு வலிமையுடனும், ஆரோக்கியத்துடனும் இருக்க. நீங்கள் ஒழுங்காக உடற்பயிற்சி செய்வதுடன் உங்களது தீயப் பழக்கங்களை கைவிடவேண்டியது அவசியமான ஒன்றாகும்.


மனிதனை முடக்கும் தசைநார்த் தேய்வு நோய்(Muscular Dystrophy)

தசைநார்த் தேய்வு நோய் என்றால் என்ன ?
தசைநார்த் தேய்வு என்பது ஒரு மரபியல் நோயாகும். தசைநார்த்தேய்வு நோய் நரம்புகளைத் தாக்காமல் குறிப்பிட்ட தசைகளை மட்டும் படிப்படியாக செயலிழக்கச் செய்யும்.
தசை தொடர்ந்து பலமிழத்தல்
தசைப் புரதக் குறைபாடுகள்
தசைச் செல்கள் அழிவு – ஆகிய மூன்று முக்கிய குறைபாடுகள் இந்நோயில் காணப்படுகின்றன.
ஏறக்குறைய 30 வகைகள் இவற்றில் இருந்தாலும் இவை ஒன்பது முக்கிய வகைகளாகப் பகுக்கப்பட்டுள்ளன.இதில் Duchenne MD-டுஷென் மஸ்குலர் டிஸ்ட்ரோபி- டுஷன் தசை நார்த்தேய்வு முக்கியமானது.

கொலஸ்ட்ரோலை குறைக்கும் உணவுகள்.

கொலஸ்டிரால் இருக்கிறது என்றால் உடனடியாக மருந்துக்கு ஓடாதீர்கள். வாழ்க்கை முறையை மாற்றி அமைத்தாலே போதும். அளவுடன் முட்டை சாப்பிடலாம். ஆனால்,நெய், வெண்ணெய் முதலியவற்றை முற்றிலும் தவிர்க்கவும். பெண்கள் தைராய்டு சுரப்பி பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.

இளம் பெண்களைவிட வயதான பெண்கள் உடற்பயிற்சி செய்வது, ஓடுவது ஆகியவற்றில் ஈடுபடுவதால் இவர்களுக்கு எல்.டி.எல். என்ற கெடுதலான கொலஸ்டிரால் இல்லை. மாறாக, நல்ல கொலஸ்டிராலான ஹெச்.டி.எல். கொலாஸ்டிரால் சரியான அளவில் இருக்கிறது.

இதயத்தை காக்கும் ஜாக்கிங்.

ஜாக்கிங் செய்தால் இதயதாக்கத்தை தடுக்கும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். அவை...

இதயம் சுருங்கி விரிவடையும் பொழுது உடலுக்கு அனுப்பும் இரத்தத்தின் அளவானது ஒவ்வொரு முறையும் அதிகமாகிறது.

ஜாக்கிங் இதயத் தசைகளை வலுவாக்குகிறது.

இரத்தக் குழாய்கள் அமைப்புக்களையும், சுற்றியுள்ள திசுக்களையும் வலுவாக்குகின்றது.