அழகிய பற்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அழகிய பற்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பற்களை பராமரிப்பதற்கான சில டிப்ஸ்.

எல்லோருக்குமே வெண்மையான பற்கள் மீது ஆசைதான். ஆனால், பற்களைச் சரியாகப் பராமரிக்காமல் இருந்தால், அவை மஞ்சள் நிறமாகக் காட்சியளிக்கும். சிகரெட் பிடிப்பவர்கள், போதை பாக்குகளைப் பயன்படுத்துபவர்கள், வெற்றிலை போடுபவர்கள் போன்றவர்களின் பற்களைப் பார்த்தால் கறைபடிந்து காணப்படும்.

அதோடு வாய் துர்நாற்றம் வேறு. பற்களை முறைப்படி துலக்காதது, ஒரே பிரஷ்சை வருடக் கணக்கில் பயன்படுத்துவது, கண்ட கண்ட பேஸ்ட்டை உபயோகிப்பது போன்றவையே இதற்குக் காரணமாகும்.

க்யூட்டான சிரிப்பு வேண்டுமா?அதற்கான சில வழிகள்.

அனைவருக்குமே அழகான முத்துப் போன்ற பற்கள் வேண்டுமென்ற ஆசை இருக்கும். அதற்காக ஒரு நாளைக்கு பலமுறை பற்களை துலக்குவார்கள். சிலர் வெள்ளையான பற்களைப் பெறுவதற்கு பல கெமிக்கல் கலந்த பொருட்களைக் கொண்டு பற்களை பராமரிப்பார்கள். அவ்வாறு பராமரிப்பதால் மட்டும் பற்கள் நன்கு வெள்ளையாகிவிடாது.

உண்மையில் பற்களின் நிறம் வெள்ளை அல்ல. மஞ்சள் கலந்த வெள்ளை தான் பற்களின் உண்மையான நிறம். அதற்காக சரியாக பராமரிக்காவிட்டால், பற்கள் அடர் மஞ்சள் நிறத்தை அடைந்துவிடும். எனவே பற்களை ஆரோக்கியமாகவும், வலுவுடனும் வைத்துக் கொள்ளும் சில இயற்கை வழிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

அழகிய வெண்மையான பற்களை பெற வழிகள்.

எல்லோருக்குமே வெள்ளையானதும் அழகானதுமான பற்கள் வேண்டுமென்ற ஆசை இருக்கும். பற்களை பொலிவோடு வைப்பதற்கு அனைவரும் ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று முறை பற்களை துலக்குவோம். இருப்பினும் ஏதாவது உணவுகளை சாப்பிட்டு விட்டால், பற்களில் உணவுக்கறைகள் படிந்து மற்றும் ஆங்காங்கு சிக்கிக் கொண்டு, பற்களின் நிறத்தை மஞ்சள் நிறமாக்குகின்றன.

பற்களுக்கு நன்மை தரும் உணவுகளான ஸ்ட்ராபெர்ரி, சிட்ரஸ் பழங்கள், கேரட் போன்றவற்றை சாப்பிட்டால், பற்கள் வெண்மையுடன் இருக்கும். மேலும் சமையல அறையில் உள்ள சில சமையல் பொருட்களை