பற்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பற்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

இரத்தம், கத்தியின்றி பல் சிகிச்சை முறை.

பற்களில் உண்டாகக்கூடிய நோய்களாக பற்சொத்தை மற்றும் ஈறு, பல் வேர்கள் மற்றும் தாடை எலும்பில் ஏற்படும் கோளாறுகள் என்பவற்றையே குறிப்பிட்டு கூறலாம். இவற்றில் ஏற்படும் கோளாறுகளின் இடத்தைப் பொறுத்து பல்வேறு பெயர்களைப் பெறுகின்றன.

பற்சொத்தைக்கு முக்கியமான காரணம், உணவுப் பழக்கவழக்கம் தான். இந்தியா, இலங்கை போன்ற அனேக ஆசிய நாடுகளின் உணவுக் கலாச்சாரத்தில் மாச்சத்து, இனிப்பு என்பன அதிகமாகச் சேர்த்துக் கொள்ளப்படுகின்றன. பற்களில் எளிதில் படிந்துவிடும் இவற்றை, உணவு வேளைக்குப் பின் முறையாக அகற்ற பெரும்பாலானோர் தவறிவிடுகின்றனர்.இதனால், உணவைச் ஜீரணிக்கச் செய்யும் பக்டீரியாக்கள், பற்களில் தங்கும் உணவை, பற்களில் வைத்தே ஜீரணிக்கச் செய்கின்றன. இதனால் பற்சொத்தை ஏற்படுகிறது.

சிலரது உமிழ்நீர் கெட்டித்தன்மை உடையதாக இருக்கும். இதனால், மாச்சத்து, இனிப்பு போன்றன பற்களின் உட்பகுதியில் அதிக நேரம் தேக்கி வைக்கப்படுவ தாலும் பற்சொத்தை உண்டாகிறது.

"வாயை சுத்தமாக வைக்கா விட்டால் புற்றுநோய் வரும்" ஆராய்ச்சி தகவல்.

வாயில் ஏற்படும் புற்றுநோய் தெற்காசிய நாடுகளில் அதிகமாகி வருகிறது. இந்த நோய்க்கு தீர்வு கண்டுபிடிக்க காலதாமதமாவதால் உலகில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக, நியூசிலாந்தைச் சேர்ந்த தோல்நோய் சிகிச்சை மையம் தெரிவிக்கிறது.வாய் புற்றுநோய்க்கான காரணங்களில் வாய் சுத்தமில்லாமல் இருப்பதும் ஒரு காரணமாகும்.

வாயை சுத்தப்படுத்தும் உணவுகள்:

கர்ப்பிணிப் பெண்கள் பற்களை பாதுகாப்பது மிக முக்கியமாகும்.

'சரியா பல் தேய்ச்சியா..?’
என இல்லந்தோறும் ஒவ்வொரு நாளும் பெரியவர்கள் குழந்தைகளுக்கு,  நடத்தும் இந்த சுகாதார பல்பாடம் பாலகர்களுக்கு மட்டுமல்ல; குழந்தையைப் பிரசவிக்கக் காத்திருக்கும் கர்ப்பிணிகளுக்கும்தான்!
'பல் சுகாதாரத்தை கர்ப்பிணிகள் அலட்சியப்படுத்தினால்... பிறக்கும் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது!’ என்று எச்சரிக்கின்றன, வாய்க்குழி சுகாதாரத்துக்காக 'குரல்' கொடுத்துவரும் சர்வதேச அமைப்புகள்.

பற்களையும் வாயையும் சுத்தமாக வைத்துக்கொள்ள சில டிப்ஸ்.

பற்களின் நோய்கள் :-

1. துத்தி இலை ஒரு கைப்பிடி பறித்துக் கழுவி வாயில் மெல்லவும்.

2. காட்டாமணக்கு குச்சியைக் கொண்டு பல்துலக்கிவரவும் , பல்நோய்கள், பல்வலி, பல்ஈறு நோய் தீரும்.
வாய் நாற்றம் அகல:-

1. நீரில் எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து வாய் கொப்பளித்தால் பேசும் போது வெளிப்படும் வாய் நாற்றம் அகலும்.

பற்களை பராமரிப்பதற்கான சில டிப்ஸ்.

எல்லோருக்குமே வெண்மையான பற்கள் மீது ஆசைதான். ஆனால், பற்களைச் சரியாகப் பராமரிக்காமல் இருந்தால், அவை மஞ்சள் நிறமாகக் காட்சியளிக்கும். சிகரெட் பிடிப்பவர்கள், போதை பாக்குகளைப் பயன்படுத்துபவர்கள், வெற்றிலை போடுபவர்கள் போன்றவர்களின் பற்களைப் பார்த்தால் கறைபடிந்து காணப்படும்.

அதோடு வாய் துர்நாற்றம் வேறு. பற்களை முறைப்படி துலக்காதது, ஒரே பிரஷ்சை வருடக் கணக்கில் பயன்படுத்துவது, கண்ட கண்ட பேஸ்ட்டை உபயோகிப்பது போன்றவையே இதற்குக் காரணமாகும்.

அழகிய வெண்மையான பற்களை பெற வழிகள்.

எல்லோருக்குமே வெள்ளையானதும் அழகானதுமான பற்கள் வேண்டுமென்ற ஆசை இருக்கும். பற்களை பொலிவோடு வைப்பதற்கு அனைவரும் ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று முறை பற்களை துலக்குவோம். இருப்பினும் ஏதாவது உணவுகளை சாப்பிட்டு விட்டால், பற்களில் உணவுக்கறைகள் படிந்து மற்றும் ஆங்காங்கு சிக்கிக் கொண்டு, பற்களின் நிறத்தை மஞ்சள் நிறமாக்குகின்றன.

பற்களுக்கு நன்மை தரும் உணவுகளான ஸ்ட்ராபெர்ரி, சிட்ரஸ் பழங்கள், கேரட் போன்றவற்றை சாப்பிட்டால், பற்கள் வெண்மையுடன் இருக்கும். மேலும் சமையல அறையில் உள்ள சில சமையல் பொருட்களை

பற்களில் இரத்தம் கசிதலுக்கான தீர்வுகள்.

ஈறுகளில் வீங்கச் செய்து பல் துலக்கும் போதோ அல்லது கடினமான உணவுப் பொருட்களை உட்கொள்ளும் போதோ ஈறுகளில் உண்டாகும் இரத்தக்கசிவு தான் இரத்தக்கசிவு நோய்.
இது பெரும்பாலும் வாய் ஆரோக்கியத்தை ஒழுங்காக பராமரிக்காமல் இருப்பதனாலேயே வருவதாகக் கூறப்படுகிறது.

ஆனால் சில சமயங்களில் உடல் ஆரோக்கியத்தை குன்றச் செய்யும்வைட்டமின் பற்றாக்குறை, ஸ்கர்வி என்றழைக்கப்படும் பல் வீக்க நோய், லுக்கேமியா என்றழைக்கப்படும் புற்றுநோய், அல்லது இதர நோய்த்தொற்றின் அறிகுறியாகவும் இது இருக்கலாம்.