அரண்மனை. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அரண்மனை. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஆண்ட்ரியா-ராய்லட்சுமியை மூடுஅவுட் செய்த ஹன்சிகா!

சுந்தர்.சி இயக்கியுள்ள அரண்மனை படம் பிரமாண்டமான முறையில் உருவாகியிருக்கிறது. குறிப்பாக தமிழ்நாட்டு ரசிகர்களை விட ஆந்திரவாலாக்கள் அந்த படத்தை கொண்டாடுவார்கள். அந்த அளவுக்கு அவர்களுக்கே உரித்தான பேய், மந்திரவாதி என மிரட்டலாக தயாராகியிருக்கிறது.

அதோடு, சந்தானம், வினய், ஹன்சிகா, ராய் லட்சுமி, ஆண்ட்ரியா, சுந்தர்.சி உள்பட ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர். ஆனால், ஹன்சிகாவுக்கே படத்தில் பிரதான வேடமாக இருக்கும் என்று நாம் நினைத்தாலும், இன்றைக்கு முன்னணியில் இருக்கும் ஒரு நடிகை நடிக்கக்கூடிய அளவுக்கு அது வெயிட்டான வேடம் இல்லை என்று சொல்லும் சுந்தர்.சி., அவர் இந்த வேடத்தை ஏற்று நடித்ததே ரொம்ப பெரிய விசயம் என்கிறார். அதனால் அந்த படத்தில் நடித்தவர்களில் ஹன்சிகாவுக்கு ஸ்பெசல் தேங்க்ஸ் சொல்கிறார் சுந்தர்.சி.