சுந்தர்.சி இயக்கியுள்ள அரண்மனை படம் பிரமாண்டமான முறையில் உருவாகியிருக்கிறது. குறிப்பாக தமிழ்நாட்டு ரசிகர்களை விட ஆந்திரவாலாக்கள் அந்த படத்தை கொண்டாடுவார்கள். அந்த அளவுக்கு அவர்களுக்கே உரித்தான பேய், மந்திரவாதி என மிரட்டலாக தயாராகியிருக்கிறது.
அதோடு, சந்தானம், வினய், ஹன்சிகா, ராய் லட்சுமி, ஆண்ட்ரியா, சுந்தர்.சி உள்பட ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர். ஆனால், ஹன்சிகாவுக்கே படத்தில் பிரதான வேடமாக இருக்கும் என்று நாம் நினைத்தாலும், இன்றைக்கு முன்னணியில் இருக்கும் ஒரு நடிகை நடிக்கக்கூடிய அளவுக்கு அது வெயிட்டான வேடம் இல்லை என்று சொல்லும் சுந்தர்.சி., அவர் இந்த வேடத்தை ஏற்று நடித்ததே ரொம்ப பெரிய விசயம் என்கிறார். அதனால் அந்த படத்தில் நடித்தவர்களில் ஹன்சிகாவுக்கு ஸ்பெசல் தேங்க்ஸ் சொல்கிறார் சுந்தர்.சி.
அதோடு, அவர் இந்த ரோலில் நடிக்க சம்மதித்து விட்டதையடுத்து, ஸ்பாட்டிற்குள் ஹன்சிகா கால் வைத்தது முதல் 6 மணிக்கு பை சொல்வதுவரை தடபுடல் கவனிப்புகள்தானாம். இதனால் அதே ஸ்பாட்டில் இருக்கும் ஆண்ட்ரியாவும், ராய் லட்சுமியும் பலமுறை டென்சனாகியிருக்கிறார்களாம். மேலும், அரண்மனை ஆடியோ விழா நடந்தபோதுகூட, ஹன்சிகா படத்தின் ப்ரமோஷனுக்காக மீடியாக்களிடம் அதிக பேச்சு கொடுக்காமல் நழுவியதைப்பார்த்த மேற்படி நடிகைகள் இருவரும், அவருக்கே இல்லாதது நமக்கு என்ன வந்தது என்று தாங்களும் நழுவி எஸ்கேப்பாகி விட்டனர்.
ஆக, ஒன்றுக்கு மேற்பட்ட நடிகைகள் ஒரே படத்தில் இடம்பெற்றாலே இப்படித்தான் ஏதோ ஒரு வகையில் அக்கப்போர் வெடித்து விடுகிறது.

cinema,hansika, andrea, rai lakshmi, vinai, santhanam, sundar.c, aranmanai