தமிழில் மொழி, அபியும் நானும், கனாக்கண்டேன், நினைத்தாலே இனிக்கும், ராவணன் உள்பட பல படங்களில் நடித்தவர் பிருத்விராஜ். மலையாள நடிகரான இவர் தற்போது வசந்தபாலன் இயக்கும் காவியத்தலைவன் படத்தில் சித்தார்த்துடன் இணைந்து நடித்து வருகிறார். இந்த படத்தில் நடித்தபோது பிருத்விராஜூடன் போட்டி போட்டு நடித்து களைத்து விட்டேன்.
அந்த அளவுக்கு சரியான போட்டியாளராக இருக்கிறார் என்று பிருத்விராஜூடன் நடித்த அனுபவத்தைப்பற்றி நிகழ்ச்சி ஒன்றில் வெளிப்படையாக சொன்னார் சித்தார்த்.
அதோடு, அதே மேடையில், பிருத்விராஜ் ஏன் இந்த நிகழ்ச்சிக்கு வரவில்லை என்று கேள்விகள் எழுந்தபோது, அவரது மனைவியை பிரசவத்திற்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அதனால்தான் அவரால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை என்று தெரிவித்த சித்தார்த், இன்னும் சில தினங்களில் பிருதிவிராஜ் அப்பா ஆன சந்தோச செய்தி நமது காதுகளுக்கு வந்துவிடும் என்றார்.
அந்த செய்தி இப்போது வெளியாகியுள்ளது. கொச்சினில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிருத்விராஜின் மனைவி சுப்ரியாவுககு நேற்று முன்தினம் பகல் 3.30 மணி அளவில் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளதாம். இதையடுத்து தனது நட்பு வட்டார நடிகர்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட பிருத்விராஜ், நான் அப்பா ஆகிவிட்டேன் என்று தனது டுவிட்டரிலும் இனிப்பு செய்தி வெளியிட்டுள்ளார்.

prithiviraj,subriya, female child, kaviya thalaivan, vasantha balan, siddharth