ஆடுகளம் டாப்சி என்றாலே அடக்க ஒடுக்கமான கேரக்டர்களுக்குத்தான் பொருத்தமாக இருப்பார் என்று கூறிய காலம் போய், எப்போது லாரன்சின் முனி -3 கங்காவில் மிரட்டலான வேடத்தில நடிக்கத் தொடங்கினாரோ அப்போதிலிருந்து அவரது கேரியர் அதிரடியாக மாறிக்கொண்டிருக்கிறது. அதாவது விஜயசாந்தி கூட படிப்படியாகத்தான் ஆக்சன் ஹீரோயினியாக மாறினார்.
ஆனால் டாப்சியோ, ரன்னிங் ஷாதி.காம் என்ற இந்தி படத்தில் நடித்தவர், அதையடுத்து, பேபி என்றொரு படத்தில் புலனாய்வு செய்யும் சீக்ரெட் ஏஜெண்டாக நடித்து வருகிறார். இதற்காக பிரத்யேக பயிற்சி எடுத்ததோடு நில்லாமல், தனது பஞ்சு மிட்டாய் உடல்கட்டையும் வலுவாக மாற்றிக்கொண்டு வரிந்து கட்டி நடித்துள்ளாராம் டாப்சி. அவருக்கு ஹாலிவுட் நடிகைகள் டைவடித்து எதிரிகளை பந்தாடுவது போன்று ஒரு அதிரடி சண்டை காட்சிகூட அப்படத்தில் உள்ளதாம்.
அதைப்பார்த்து விட்டு, இப்போது சுந்தரகாண்ட் என்றொரு இந்தி படத்தில் டாப்சியை ஐ.பி.எஸ் அதிகாரி வேடத்தில் நடிக்க கமிட் பண்ணியிருக்கிறார்களாம். இந்த சேதியைக் கேட்டு, இவருக்கு காக்கி சட்டையை மாட்டி விட்டால் ரொம்ப கன்றாவியாக இருக்குமே என்று டாப்சியை அறிந்தவர்கள் விழுந்து விழுந்து சிரித்தார்களாம்.
ஆனால், எதையும காதில் போட்டுக்கொள்ளாத டாப்சி, எத்தனையோ காமெடியன்களே வில்லன்களாக கர்ஜித்திருக்கிற இந்த சினிமாவில் என்னாலும் ஆக்சன் நடிகையாக ஸ்கோர் பண்ண முடியும் என்று தில்லாக களமிறங்கி நிற்கிறார். முன்னதாக, உத்தரபிரதேசத்தில் உள்ள ஒரு ஐபிஎஸ் அதிகாரியிடம் சில டிப்ஸ்களை கேட்டு தெரிந்து கொண்டு பக்கா ஐபிஎஸ்ஸாக மாறி நடிக்கிறாராம் டாப்சி. பூனையாக இருந்த டாப்சி இப்போது புலியாகி உறுமிக்கொண்டிருப்பதைப் பார்த்து, அவரை கிண்டல் செய்தவர்கள் ஆச்சர்யத்தில் அசந்து போய் நிற்கிறார்களாம்

cinema, tapsee, lawrance, sundarakant, IPS