டாப்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
டாப்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பூனையாக இருந்த டாப்சி புலியாக மாறினார்!

ஆடுகளம் டாப்சி என்றாலே அடக்க ஒடுக்கமான கேரக்டர்களுக்குத்தான் பொருத்தமாக இருப்பார் என்று கூறிய காலம் போய், எப்போது லாரன்சின் முனி -3 கங்காவில் மிரட்டலான வேடத்தில நடிக்கத் தொடங்கினாரோ அப்போதிலிருந்து அவரது கேரியர் அதிரடியாக மாறிக்கொண்டிருக்கிறது. அதாவது விஜயசாந்தி கூட படிப்படியாகத்தான் ஆக்சன் ஹீரோயினியாக மாறினார்.

ஆனால் டாப்சியோ, ரன்னிங் ஷாதி.காம் என்ற இந்தி படத்தில் நடித்தவர், அதையடுத்து, பேபி என்றொரு படத்தில் புலனாய்வு செய்யும் சீக்ரெட் ஏஜெண்டாக நடித்து வருகிறார். இதற்காக பிரத்யேக பயிற்சி எடுத்ததோடு நில்லாமல், தனது பஞ்சு மிட்டாய் உடல்கட்டையும் வலுவாக மாற்றிக்கொண்டு வரிந்து கட்டி நடித்துள்ளாராம் டாப்சி. அவருக்கு ஹாலிவுட் நடிகைகள் டைவடித்து எதிரிகளை பந்தாடுவது போன்று ஒரு அதிரடி சண்டை காட்சிகூட அப்படத்தில் உள்ளதாம்.

ரிலீசிற்கு தயாராகிறது முனி-3

நடிகர் லாரன்ஸ் இயக்கி நடித்த முனி படத்தின் 3வது பாகமும் தற்போது ரிலீசிற்கு தயாராகி வருகிறது. இந்த படத்தையும் லாரன்சே இயக்கி நடித்துள்ளார்.

முனி-3ன் காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு விட்ட நிலையில் பாடல்கள் மட்டும் எடுக்கப்பட உள்ளன. தற்போது படத்தின் காட்சிகளை எடிட்டிங்க செய்யும் பணியில் லாரன்ஸ் மும்முரமாக இறங்கி உள்ளார்.