விஜய்யை இயக்கப்போகிறாராம் ராஜாராணி அட்லி!

ஆர்யா-நயன்தாரா, ஜெய்-நஸ்ரியா நடிப்பில் உருவான படம் ராஜா ராணி. ஏ.ஆர்.முருகதாஸின் பாக்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. அதையடுத்து, அட்லி இயக்கும் புதிய படத்தையும் ஏ.ஆர்.முருகதாஸின் நிறுவனமே தயாரிக்கயிருப்பதாக சமீபகாலமாக செய்திகள் வெளியாகிக்கொண்டிருந்தது. ஆனால் இப்போது அட்லியின் அடுத்த படத்தை கலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேசன்ஸ் தயாரிக்கயிருப்பதாக கூறப்படுகிறது.

தற்போது, முருகதாஸின் கத்தி படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் விஜய், அப்படத்தை முடித்ததும் சிம்புதேவன் இயக்கும் படத்தில் நடிக்கிறார், அதையடுத்து அட்லி இயக்கும் படத்தில் நடிக்கிறாராம். அந்த படத்தை ஏற்கனவே விஜய் நடித்த சச்சின், துப்பாக்கி படங்களை தயாரித்த எஸ்.தாணு தயாரிக்கிறாராம்.


சமீபகாலமாக விஜய் நடித்து வரும் படங்களுக்கு ஏதாவது ஒரு வகையில் பிரச்னைகள் வெடித்து சர்ச்சைகள் உருவாகி வருவதால், தனது படங்களை தயாரிப்பவர்கள் எதையும் சாதுர்யமாக சமாளிக்கும் ஆற்றல் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் விஜய், அந்த படத்தை தாணு தயாரிக்கிறார் என்றதும் உடனே ஓ.கே சொல்லி விட்டாராம்.

விஜய் நடித்த துப்பாக்கி படத்திற்கு முஸ்லீம் அமைப்புகள் கொடி பிடித்தபோது அவற்றை எளிதாக சமாளித்து துப்பாக்கியை வெளியிட்ட தாணு, அப்படத்தையும் தனது அதிரடியான பப்ளிசிட்டிகள் மூலம் மெகா ஹிட் படமாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.