வைரமுத்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வைரமுத்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கவியரசு வைரமுத்துவினால் 'வாக்கிங்’ பற்றி ஒரு நடைச்சித்திரம்.

காலை நேரம் தான் நடைப்பயிற்சிக்குப் பெரிதும் உகந்த நேரம்.  அது ஓசோன் நிறையும் நேரம்; அதிக ஆக்சிஜன் கிடைக்கும் நேரம். படுக்கையில் அசைவற்றுக் கிடந்த உங்கள் மூட்டுகள் விறைத்திருக்கும். காலை நேர நடைப்பயிற்சியால் மூட்டுகள் முடிச்சவிழும். அடுத்த வீட்டு நண்பரை அழைத்துக் கொண்டு அடுத்த தெருவில் காப்பி சாப்பிட்டு ஒரு மணிநேரத்தில் வீடு வந்து சேர்வதே நடைப்பயிற்சி என்று பலர் நம்புகிறார்கள்; தவறு. நடைப்பயிற்சியில் முக்கியமானது நேரமல்ல; தூரம் தான். குறைந்த நேரத்தில் அதிக தூரம் நடப்பது நல்ல பயிற்சி.

பாரதிராஜா- யுவன்ஷங்கராஜா புதிய கூட்டணி!

தமிழ் திரையுலகில் இயக்குனர் பாரதிராஜா, இசையமைப்பாளர் இளையராஜா ஒரே காலகட்டத்தில் அறிமுகமாகி இருவருமே அவரவர் துறையில் உயர்ந்து வந்தனர். நெருங்கிய நண்பர்களான இவர்கள் இருவரும் இணைந்து பல வெற்றிப் படங்களையும் பாடல்களையும் கொடுத்திருக்கிறார்கள்.

இருவரும் அடிக்கடி சண்டை போட்டுக் கொள்வதும், பின்னர் சேர்ந்து கொள்வதும் வழக்கமான ஒன்றுதான். இருந்தாலும் இருவரும் கடைசியாக இணைந்து கடைசியாகப் பணியாற்றிய படம் 1992ல் வெளிவந்த 'புது நெல்லு புது நாத்து'. சுமார் 22 வருடங்களாக அவர்கள் இணைந்து பணியாற்றவேயில்லை. அதன் பின் ஒரு சில திரைப்பட விழாக்களில் மட்டுமே இருவரும் கலந்து கொண்டார்கள்.

வைரமுத்துவுக்கு எம்.ஏ.சிதம்பரம் விருது

தமிழ் மொழி, இலக்கியம் ஆகியவற்றில் சிறந்து பணியாற்றுகிறவர்களுக்கு எம்.ஏ.சிதம்பரம் செட்டியார் அறக்கட்டளை ஆண்டுதோறும் எம்.ஏ.சிதம்பரம் செட்டியார் விருது வழங்கி கவுரவித்து வருகிறது.

அந்த வரிசையில் இந்த ஆண்டுக்கான விருது கவிஞரும், திரைப்பட பாடலாசிரியருமான வைரமுத்துவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற அக்டோபர் மாதம் 12ந் தேதி நடக்கும் விழாவில் இந்த விருது அவருக்கு வழங்கப்படுகிறது.

வேட்டி அணியாமைக்கு காரணம் என்ன? விளக்கம் தருகிறார் வைரமுத்து.


சென்னை கிரிக்கெட் கிளப்பிற்கு வேட்டி கட்டிச் சென்ற ஒரு நீதிபதியும், வக்கீலும் திருப்பி அனுப்பப்பட்ட சம்பவம் தமிழ் நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து வைரமுத்து வெளியிட்டுள்ள அறிக்கையின் சுருக்கம் வருமாறு:

வேட்டி கட்டியவர் நீதிபதியாக அங்கு செல்லவில்லை என்று நீதிமன்றம் கூறியிருந்தாலும், தனிமனிதனாக அவரை கருதினாலும் அவருக்கு இழைக்கப்பட்டது அநீதிதானே. இதற்காக குரல் கொடுத்த தமிழக அரசு உள்ளிட்ட அனைவரையும் பாராட்டுகிறேன். தறியில் இருந்து வெட்டி எடுக்கப்படும் துணி என்பதிலேயே அதற்கு வேட்டி என்று பெயர்.

வேட்டி என்ற சொல் தமிழுக்கு மட்டுமே உரிய சொல். எனவே வேட்டியை தான் வாழும் தட்பவெப்ப நிலைக்கேற்ற உடையாக கண்டுபிடித்தவனே தமிழன்தான். உடுத்தல் என்பது பண்பாடு, உடை என்பது நாகரீகம். வேட்டி தமிழின் பண்பாடு அதன் நூலை இழுத்து பிடித்தால் அந்த நீளம் சொல்லும் தமிழன் பண்பாட்டு வரலாற்றை.