நடைப்பயிற்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நடைப்பயிற்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கவியரசு வைரமுத்துவினால் 'வாக்கிங்’ பற்றி ஒரு நடைச்சித்திரம்.

காலை நேரம் தான் நடைப்பயிற்சிக்குப் பெரிதும் உகந்த நேரம்.  அது ஓசோன் நிறையும் நேரம்; அதிக ஆக்சிஜன் கிடைக்கும் நேரம். படுக்கையில் அசைவற்றுக் கிடந்த உங்கள் மூட்டுகள் விறைத்திருக்கும். காலை நேர நடைப்பயிற்சியால் மூட்டுகள் முடிச்சவிழும். அடுத்த வீட்டு நண்பரை அழைத்துக் கொண்டு அடுத்த தெருவில் காப்பி சாப்பிட்டு ஒரு மணிநேரத்தில் வீடு வந்து சேர்வதே நடைப்பயிற்சி என்று பலர் நம்புகிறார்கள்; தவறு. நடைப்பயிற்சியில் முக்கியமானது நேரமல்ல; தூரம் தான். குறைந்த நேரத்தில் அதிக தூரம் நடப்பது நல்ல பயிற்சி.