விக்ரம் பிரபு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விக்ரம் பிரபு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கத்தி, பூஜையுடன் வெள்ளைக்கார துரை டிரைலர்!

சிகரம் தொடு படத்திற்கு பிறகு விக்ரம் பிரபு நடித்து வரும் படம் வெள்ளக்கார துரை. எழில் இயக்கி வரும் இப்படத்தில், விக்ரம் பிரபு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடித்து வருகிறார். ரியல் எஸ்டேட் கதையை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது.

தஞ்சை மற்றும் அதன் சுற்றுபுறங்களில் இப்படம் படமாக்கப்பட்டுள்ளது. எழிலின் வழக்கமான காமெடி, இந்தப்படத்திலும் தொடர்கிறது. ஏற்கனவே விக்ரம் பிரபு முன்பு ஒரு பேட்டியில் வெள்ளக்கார துரை படம் காமெடி படம் என்றும், இது ஒரு புதுவித அனுபவத்தை தந்ததாகவும் கூறியிருந்தார்.

நான் சரிப்பட்டு வரமாட்டேன்பதுங்குகிறார் ஸ்ரீதிவ்யா

'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தில் நடித்த ஸ்ரீதிவ்யா, அரை டஜன் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். தற்போது, கோலிவுட்டில், குடும்ப பாங்கான வேடங்களில் நடிக்கும் சில நடிகைகள், ஏகப்பட்ட கண்டிஷன்கள் போடுவதால், பல இயக்குனர்கள் ஸ்ரீதிவ்யாவை நோக்கிச் செல்கின்றனர்.

ஆனால், அவருக்கு ஒரு கவலை உள்ளது. உயரம், குறைவாக இருப்பதால், உயரமான ஹீரோக்களுடன் ஜோடி சேருவதில் பிரச்னையாக இருக்குமே என கவலைப்படுகிறார். உயரமான ஹீரோக்களின் படம் என்றால், 'அதற்கு நான் சரிப்பட்டு வரமாட்டேன்' என, ஒதுங்கி கொள்கிறாராம். ஆனால், எப்படியோ, உயரமான ஹீரோவான, விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக, அவரை ஒரு படத்தில் நடிக்க வைத்து விட்டனர். ஜோடிப் பொருத்தம் ஒர்க் அவுட் ஆகுமா என, பொறுத்திருந்து பார்ப்போம்.

சிகரம் தொடு படத்தால் தியேட்டர் கேண்டீன், பார்க்கிங் ஆட்கள் கூட மகிழ்ச்சி: இயக்குனர் சொல்கிறார்

விக்ரம் பிரபு, மோனல் கஜ்ஜார் நடித்த சிகரம் தொடு படத்தை கவுரவ் இயக்கி இருந்தார். இந்தப் படம் கடந்த 12ந் தேதி வெளிவந்தது. விக்ரம் பிரபு நடித்த படங்களான கும்கி, இவன் வேற மாதிரி, அரிமா நம்பியை ஒப்பிடும்போது சிகரம் தொடு மிக குறைவான ரிசல்ட்டையே கொடுத்துள்ளது என்பது பொதுவான கணிப்பு ஆனால் இயக்குனர் கவுரவ் சிகரம் தொடு படத்தால் தியேட்டர் கேண்டீன், பார்க்கிங் ஆட்கள் கூட சந்தோஷமாக இருக்கிறார்கள் என்கிறார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தூங்கா நகரத்துக்கு பிறகு எனது இரண்டாவது படமாக சிகரம் தொடுவிற்கு மக்கள் மற்றும் மீடியாக்கள் கொடுத்த ஆதரவிற்கு மிகவும் நன்றி. கடந்த 12ந் தேதி 300 தியேட்டர்களில் சிகரம்தொடு திரையிடப்பட்டது.

ஜீன்கள், ரத்தத்தால் மட்டும் சினிமாவில் ஜெயிக்க முடியாது - உழைப்பும், முயற்சியும் தேவை! கமல் பேச்சு

கும்கி, இவன் வேற மாதிரி, அரிமா நம்பி படங்களுக்கு பிறகு நடிகர் விக்ரம் பிரபு நடித்துள்ள படம் சிகரம் தொடு. தூங்காநகரம் இயக்குநர் கெளரவ் இயக்கியுள்ளார். விக்ரம் பிரபு ஜோடியாக மோனல் கஜார் நடித்துள்ளார்.

இமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீடு நேற்று(ஆகஸ்ட் 7ம் தேதி) நடந்தது. படத்தின் ஆடியோவை கமல் வெளியிட கே.எஸ்.ரவிக்குமார் பெற்றுக்கொண்டார். கூடவே படத்தின் டிரைலரும் வெளியிடப்பட்டது, இதனை தனுஷ் வெளியிட பிரபல பின்னணி பாடகர் ஜேசுதாஸ் பெற்றுக்கொண்டார்.