லூசியா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
லூசியா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தமிழை மனப்பாடம் செய்து நடித்த தீபா சன்னதி!

கன்னடத்தில் பவன்குமார் என்பவர் ஆயிரம் தயாரிப்பாளர்களிடம் 60 லட்சம் ரூபாயை வசூலித்து எடுத்த படம்தான் லூசியா. அங்கு தாறுமாறாக ஓடிய இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கும் ஆவலில் அதன் ரீமேக் உரிமையை கேட்க சென்றபோதுதான், ஏற்கனவே சி.வி.குமார் என்பவர் வாங்கி விட்டார் என்ற விவரம் சித்தார்ததுக்கு தெரிய வந்திருக்கிறது.

நல்லவேளையாக அவரும் சித்தார்த்தின் நண்பர் என்பதால், எந்தவித சிரமமும் இன்றி உடனே அதில் கமிட்டாகி தற்போது நடித்தும் முடித்து விட்டார் சித்தார்த். எனக்குள் ஒருவன் என்ற அந்த படத்தில் முதன்முதலாக இரண்டு வேடங்களில் நடித்திருக்கும் அவருக்கு ஜோடியாக இந்த படத்தில் தீபா சன்னதி என்ற கன்னட நடிகையே தமிழிலும் நடித்திருக்கிறார்.